tamilnadu

img

மருந்து விற்பனை பிரதிநிதிகள் ஆர்ப்பாட்டம்

மருந்து விற்பனை பிரதிநிதிகள் ஆர்ப்பாட்டம்

கோவை, ஆக.19- தொழிலாளர் நலனுக்கு எதிரான சட்டங்களை ஒன் றிய அரசு திரும்பப்பெற வேண்டும் உள்ளிட்ட கோரிக் கைகளை வலியுறுத்தி மருந்து விற்பனை பிரதிநிதி கள் சங்கத்தினர் ஆர்ப்பாட் டத்தில் ஈடுபட்டனர். எஸ்பிஇ ஆக்ட் 1976 சட்டத்தை பாது காத்து, சட்டத்தை அமல்படுத்தாத நிறுவ னங்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். தொழிலாளர்களுக்கு விரோதமாக, சட்டத் தொகுப்புகளாக சுருக்கிய ஒன்றிய அரசை கண்டித்தும், விற்பனை அபிவிருத்தி பணியை தொழில்துறை என ஆணையிட வேண்டும். 8 மணி நேர பணியை அமல்ப டுத்த ஆணையிட வேண்டும். குறைந்த பட்ச  ஊதியமாக 26,910 நிர்ணயம் செய்ய வேண் டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி மருந்து விற்பனை பிரதிநிதிகள் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு, மருந்து விற்பனை பிரதிநிதிகள் சங்கத்தின் மாவட்டச் செயலாளர் பி.மனோஜ்குமார் தலைமை வகித்தார். மாநிலக் குழு உறுப்பி னர் ஏ.முகமது ஜாகிர் உசேன் முன்னிலை வகித்தார். அகில இந்திய மருந்து விற்பனை பிரதிநிதிகள் சம்மேளன மாநில செயற்குழு உறுப்பினர் ஜி. வினோஜ் ரமானுஜம், சிஐடியு  மாவட்டச் செயலாளர் எஸ்.கிருஷ்ணமூர்த்தி,  மாவட்டப் பொருளாளர் ஆர்.வேலுசாமி உள் ளிட்டோர் உரையாற்றினர். முடிவில், சங்கத் தின் இணைச்செயலாளர் மணிகண்டன் நன்றி கூறினார். இதில், திரளான மருந்து விற்பனை பிரதிநிதிகள் பங்கேற்றனர். ஈரோடு ஈரோடு மாவட்டம், வீரப்பன்சத்திரத்தில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு, சங்க தலை வர் வி.சுரேஷ்பாபு தலைமை வகித்தார். சிஐ டியு மாவட்டச் செயலாளர் எச்.ஸ்ரீராம், சங்கத் தின் செயலாளர் மு.சங்கரன் ஆகியோர் சிறப் புரையாற்றினர். இதில் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.