tamilnadu

img

அடிப்படை வசதி கேட்டு ஆட்சியரிடம் மனு

அடிப்படை வசதி கேட்டு ஆட்சியரிடம் மனு

சேலம், செப். 22- சேலம் மாவட்டம், ஆத்தூர்  சட்டமன்றத் தொகுதிக்குட் பட்ட கருமந்துறை, தாழ் வள்ளம் கிராமத்தில் வசிக் கும் மக்களுக்குத் தேவை யான அடிப்படை வசதிகளை  வலியுறுத்தி, இந்திய ஜனநா யக வாலிபர் சங்கத்தினர் சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் திங்களன்று மனு அளித்தனர். ஆட்சியரிடம் அளிக்கப்பட்ட அந்த மனு வில், தாழ்வள்ளம் கிராமத்தில் மயான வசதி இல்லாததால், பொதுமக்கள் பெரும் சிரமத் திற்குள்ளாகின்றனர். எனவே, உடனடியாக அங்கு மயானத்தை அமைத்துத் தர வேண் டும். இங்குள்ள அரசு நடுநிலைப்பள்ளியில் மாணவர்களுக்கான கழிப்பறை வசதி முற் றிலும் இல்லை. இதனால் மாணவர்கள் பெரி தும் பாதிக்கப்படுகின்றனர். எனவே, பள்ளிக்கு உடனடியாகக் கழிப்பறை வச தியை ஏற்படுத்தித் தர வேண்டும். உயர் நிலைப் பள்ளிக்குச் செல்லும் மாணவர்க ளுக்குப் போதிய பேருந்து வசதி இல்லாத தால், அவர்கள் பள்ளிக்குச் செல்வதில் சிக் கல் ஏற்படுகிறது. மாணவர்களின் நலனைக்  கருதி, போதுமான பேருந்து வசதியை ஏற்ப டுத்த வேண்டும் என அதில் தெரிவித்துள் ளனர்.  முன்னதாக, வாலிபர் சங்க மாவட்ட ஒருங் கிணைப்பாளர் பெரியசாமி தலைமையில் நடைபெற்ற இந்த மனு அளிக்கும் நிகழ் வில், துணை ஒருங்கிணைப்பாளர் கோகுல்,  கல்வராயன் மலை கமிட்டி தலைவர் நீல கண்டன், மற்றும் கமிட்டி உறுப்பினர்கள் செந்தில், டார்வின் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.