tamilnadu

img

அடிப்படை வசதிகள் செய்து தரக்கோரி மனு

அடிப்படை வசதிகள் செய்து தரக்கோரி மனு

நாமக்கல், செப்.10- நாமக்கல் மாவட்டம், எரு மப்பட்டி ஒன்றியம், பொன் னேரி கைகாட்டியில் இருந்து கோம்பை வரையிலான கிரா மப் பகுதிகளில், அடிப்படை வசதிகளை ஏற்படுத்த வலி யுறுத்தி தமிழ்நாடு விவசாயி கள் சங்கத்தினர் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் மனு அளித்தனர்.  மேற்கண்ட பகுதியில், தார்ச்சாலை மற் றும் மேல்நிலை நீர்த்தேக்கக் குடிநீர் தொட்டி  அமைக்க வேண்டும் என்பது இப்பகுதி மக்களின் கோரிக்கை. கடந்த ஐந்து ஆண்டுக ளாக இக்கோரிக்கைகளை அரசு அதிகாரிக ளிடம் பலமுறை வலியுறுத்தியும் எந்த நடவ டிக்கையும் எடுக்கப்படாததால், கிராம மக் கள் மற்றும் விவசாயிகள் இணைந்து  கையெழுத்து இயக்கத்தை மேற்கொண்ட னர். அதில் திரட்டப்பட்ட கையெழுத்துக்களு டன் கூடிய மனுவினை ஊராட்சி ஒன்றிய  அதிகாரிகளிடம் வழங்கினர். இந்த நிகழ்வில் தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாவட்டக்குழு உறுப்பினர் எஸ்.கே. சிவச்சந்திரன், கிளைச் செயலாளர் ஆர்.சத்யா, ஐந்து ரோடு கிளைச் செயலாளர் கணே சன், ஒன்றியக்குழு உறுப்பினர் என்.சிவசங் கர் மற்றும் பொதுமக்கள் பலர் கலந்து கொண் டனர்.