tamilnadu

img

“சுயத் தொழில் என்ற தன்னம்பிக்கையோடு இருந்தவர்கள் கார்ப்பரேட்டுகளின் செயலியில் சிக்கித் தவிக்கின்றனர்”

“சுயத் தொழில் என்ற தன்னம்பிக்கையோடு இருந்தவர்கள் கார்ப்பரேட்டுகளின் செயலியில் சிக்கித் தவிக்கின்றனர்”

ஈரோடு, ஆக. 30- சுயத் தொழில் என்ற நம்பிக்கை யோடு இருந்தவர்கள் இப்போது கார்ப்பரேட்டுகளின் செயலிகளில் சிக் கித் தவிப்பதாக இன்சூரன்ஸ் ஊழியர் சங்கத்தின் முன்னாள் நிர்வாகி க.சுவாமி நாதன், வேதனையுடன் தெரிவித்தார். இந்திய தொழிற்சங்க மையத்தின் (சிஐடியு) ஈரோடு மாவட்ட 12ஆவது மாநாடு, ஆயிர வைசியர் திருமண மண் டபத்தில் சனியன்று துவங்கியது. இந்த  மாநாடு தோழர்கள் சீதாராம் யெச்சூரி  மற்றும் வி.எஸ். அச்சுதானந்தன் நினை வரங்கில் நடைபெற்றது. சிஐடியு மாவட் டத் தலைவர் எஸ். சுப்பிரமணியன் மாநாட்டிற்குத் தலைமை தாங்கினார்.  சுமைப்பணியாளர் சங்க கெளரவ தலை வர் டி. தங்கவேலு கொடியேற்றினார். மாவட்ட துணைத் தலைவர் பி. குணசேக ரன் அஞ்சலித் தீர்மானத்தை வாசித்தார்.  துணைச் செயலாளர் வி. பாண்டியன் வர வேற்றார். இந்த மாநாட்டில், “பாதையும், பய ணமும்” என்ற தலைப்பில் தோழர் சீதா ராம் யெச்சூரி நினைவு கருத்தரங்கம் நடைபெற்றது. இதில், தென் மண்டல இன்சூரன்ஸ் ஊழியர் சங்கத்தின் முன் னாள் பொதுச் செயலாளர் க. சுவாமிநா தன் உரையாற்றினார். அவர் பேசுகையில், “காலங்கால மாக உழைக்கும் மக்கள் சுரண்டப்பட்டு, அச்சுறுத்தப்பட்டனர். ஆனால், தற் போது நாம் எதிர்கொள்ளும் சவால் கள் நமது எதிர்காலத்தையே கேள்விக் குறியாக்கிவிட்டன. உதாரணமாக, ஒரு  பயணத்தில் ஓட்டுநர் பணமாகக் கட்ட ணம் கேட்டார். 12 கி.மீ. பயணம் முடிந் ததும் செயலி ரூ. 140 கட்டணத்தைக் காட் டியது. (பல ஆட்டோ ஓட்டுநர்களுக்கு இந்தத் தொகை போதாது என்றாலும், கேட்பதற்குத் தயங்குவார்கள்.) ஓலா வுக்குப் பணத்தை அனுப்பினால், அதைப் பெறுவதற்கு ஒரு வாரம் ஆகும்.  ஜி-பே செய்தால், வங்கிப் பரிவர்த்தனை களுக்குக் கட்டணம் நிர்ணயிக்கப்படு கிறது. ஆனால், வீட்டுக்குச் சென்றவு டன் குழந்தைகள், ‘என்ன வாங்கி வந் தீர்கள்?’ என்று கேட்பார்கள், வரு மானத்தை உயர்த்தப் போராடும் சாதா ரணத் தொழிலாளர்கள், பெரிய கார்ப் பரேட் நிறுவனங்களை எதிர்கொள்ள வேண்டிய சூழல் உருவாகியுள்ளது. இப்போது பிளம்பர், எலக்ட்ரீசியன் போன்றவர்களை அழைப்பதற்குக் கூட  செயலி வந்துவிட்டது. அவர்கள் தனி யாக இருந்தால் வேலை கிடைக் காது. செயலியில் இணைய வேண்டிய  கட்டாயம் ஏற்பட்டுள்ளது. சொந்தக் கார்  வைத்திருப்பவர்களும், வாடகைக்கு ஓட்டி வந்தவர்களும் இப்போது செயலி வழியாகவே இயங்குகிறார்கள். சுயத் தொழில் என்ற தன்னம்பிக்கையோடு இருந்தவர்கள், செயலி என்ற பெய ரில் கார்ப்பரேட்டுகளிடம் சிக்கித் தவிப் பதைப் பார்க்கிறோம். இதன் மூலம், மூலதனம் கார்ப்பரேட்டுகளிடம் குவிந்து கொண்டே இருப்பதை நாம்  கண்கூடாகக் காண்கிறோம். சாதார ணத் தொழிலாளர்களின் அன்றாட  வாழ்க்கைக்கூட மிகப் பெரிய நிறுவனங் களின் கையில் சிக்கியிருப்பதைப் பார்க்க முடிகிறது.  இதன் காரணமாக, அமைப்பு சார்ந்த மற்றும் சாராத தொழிலாளர்கள் வீதிக்கு வந்து போராட வேண்டிய கட் டாயம் ஏற்பட்டுள்ளது. இந்தப் போராட் டங்கள் அடையாளபூர்வமாக மட்டும் இருந்தால் உலகமயமாக்கலை எதிர் கொள்ள முடியாது. தமிழகத்தில் அரசுப்  போக்குவரத்துக் கழகத்தில் சுமார் 1.25  லட்சம் தொழிலாளர்கள் பணியாற்று கிறார்கள். ஒவ்வொரு நாளும் 2 கோடிப் பயணங்கள் நடைபெறுகின்றன. இது நின்றால், சமூகத்தின் பொருளாதாரச் சக்கரம் நின்றுவிடும். இவ்வாறு சமூகத்திற்குப் பணியாற்றக்கூடிய தொழிலாளர்கள் முன்வைக்கும் கோரிக்கைகள் புதியவை அல்ல. மாறாக, இழந்த பலன்களை மீட்பதற் கும், தக்கவைத்துக் கொள்வதற்குமான கோரிக்கைகளே அவை. உலகளாவிய தொழிலாளர் போராட்டங்கள் “இந்தியாவில் மட்டுமல்ல, உலகம்  முழுவதும், ‘வருமானத்தைப் பறிக் காதே, ஓய்வூதியத்தை முறையாகக் கொடு, உணவுப் பொருள் விலை உயர் வைக் கட்டுப்படுத்து’ என்று போராட் டங்கள் நடைபெற்று வருகின்றன. தொழிலாளர்கள் தற்காலிகக் கூலிக ளாக மாற்றப்படுகிறார்கள். ஒப்பந் தத் தொழிலாளர்கள் நிரந்தரத் தொழி லாளர்களுக்காகக் குரல் கொடுப்பதும், நிரந்தரத் தொழிலாளர்கள் ஒப்பந்தத் தொழிலாளர்களுடன் கைகோப்பதும் காலத்தின் அவசியமாக மாறியிருக் கிறது.  இந்தியாவில் 95% தொழிலாளர்க ளுக்குச் சமூகப் பாதுகாப்பு இல்லை. இவர்களுக்கு ஒப்பந்தங்கள் எதுவும் கிடையாது. அவர்களின் வருமானம் பறிக்கப்பட்டு, உரிமைகள் பாதிக்கப் படுகின்றன. 28 தொழிலாளர் சட்டங்கள்  4 தொகுப்புச் சட்டங்களாகச் சுருக்கப் பட்டுள்ளன. இந்தச் சட்டங்களின் வரை யறைக்குள் 80% தொழிற்சாலைகள் வராது. அங்குப் பாதுகாப்பு இடங் கள், ஓய்வறைகள் போன்ற வசதிகள் இருக்காது. மேலும், மோடி ஆட்சிக்கு  வந்த பிறகு முத்தரப்புப் பேச்சுவார்த்தை கள் நடைபெறுவதில்லை.  1920களில் தொழிலாளர் சட்டங் கள் இல்லை. 1948இல்தான் தொழில் தகராறு சட்டம் வந்தது. போனஸ் சட்டம்  வருவதற்கு முன்பே தொழிலாளர் கள் போனஸ் பெற்றனர். பணிக்கொடை  சட்டம் வருவதற்கு முன்பே பணிக் கொடை பெறப்பட்டது. அவற்றைக் கட் டுப்படுத்துவதற்காகவே சட்டங்கள் வந் தன. ஆகவே, போராட்டத்தின் மூல மாகவே தொழிலாளி வர்க்கம் உரிமை களைப் பெற்றது. சட்டத்தின் மூலம்  அல்ல. இப்போது, உரிமைகளுக்காகப் போராடும்போது, சட்டத்தைப் பாது காப்பதற்கான போராட்டமும் தேவை. 1989இல் டாடா மற்றும் பிர்லா செலுத் திய வரி 60%. 2014இல் அது 33%. இன் றைக்கு வெறும் 22%. ஆகவே, இந்த அரசை கார்ப்பரேட்டுகளுக்கான அரசு  என்கிறோம். எளிய மக்களுக்கான கேள்வியை எழுப்புவது யார் என்ற கேள்வி எழுந்துள்ளது. பள்ளி, கல்லூரி களில் பொருளாதார அநீதி பற்றிப் பாடம்  சொல்லித் தருவதில்லை. அதைக் கற் றுக்கொடுப்பவர்களுக்கும் தெரிவ தில்லை. ஆகவே, நாம் மக்களிடம் பேச  வேண்டியுள்ளது. மதத்தின் பெயரா லும், பக்தியின் பெயராலும் வெறுப்பு  அரசியல் ஏவப்படுகிறது. மத நம் பிக்கை, மத நல்லிணக்கம், மதச்சார் பின்மை என்பவை வேறு. ஆனால், மத வெறியைக் கண்டித்தால், மத உணர் வுகளைப் புண்படுத்துவதாகக் கூறு கின்றனர். ட்ரம்பின் வரிக் கொள்கை, மாஸ்கோவில் மழை பெய்தால் மதுரை யில் குடை பிடித்தது எவ்வளவு தீர்க்கதரி சனம் என்பதை நிரூபித்துக் கொண்டி ருக்கிறது,” என்றார். பொது மாநாட்டின் முடிவில் மாவட்ட  துணைச் செயலாளர் கே. மாரப்பன் நன்றி கூறினார். தொடர்ந்து, பிரதிநிதி கள் மாநாடு நடைபெற்றது. இந்த  மாநாடு ஞாயிற்றுக்கிழமை நிறைவடை கிறது.