tamilnadu

img

கோயம்புத்தூர் விரைவு செய்திகள்

காலமானார்

பொள்ளாச்சி, ஜூலை 31- அகில இந்திய விவ சாயத் தொழிலாளர் சங்கத் தின் முன்னாள் கோவை மாவட்டச் செயலாளர் பி. திருமலைசாமி உடல்நல குறைவால் வியாழனன்று காலமானார். மார்க்சிஸ்ட் கட்சியின் முன்னாள் கோவை மாவட்டக் குழு உறுப்பினராகவும்,  அகில இந்திய விவசாயத் தொழிலாளர் சங்க முன்னாள் மாவட்டச் செயலாளராகவும் பணியாற்றியவர் தோழர பி.திருமலைசாமி (வயது 73). பொள்ளாச்சி அடுத்த  சிங்காநல்லூர் கிராமத்தில் குடும்பத்துடன் வசித்து வந்த  நிலையில், வியாழனன்று உடல் நல குறைவால் கால மானார். அவரது உடலுக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி யின் மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் கே. அஜய் குமார், என்.ஆறுச்சாமி, வி.இராமமூர்த்தி, தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாவட்டச் செயலாளர் வி.ஆர்.பழ னிச்சாமி, சிஐடியு மாவட்ட துணைத் தலைவர் கே.ரத்தின குமார், விவசாயத் தொழிலாளர் சங்க மாவட்டச் செயலா ளர் ஏ.துரைச்சாமி, மாவட்டப் பொருளாளர் கே.மகாலிங் கம், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொள்ளாச்சி தாலுகா செயலாளர் மூ.அன்பரசன், ஆனைமலை தாலுகா செயலாளர் வி.எஸ்.பரமசிவம் உள்ளிட்ட திரளா னோர் நேரில் அஞ்சலி செலுத்தினர்.

ஒரு மாதமாக குடிநீரின்றி தவிக்கும் மக்கள்

ஈரோடு, ஜூலை 31– ஜல்ஜீவன் திட்டப் பிரச்சனையால். எழுமாத்தூரில் ஒரு மாதமாக குடிநீரின்றி மக்கள் தவிப்பதாகவும், உடனடியாக குடிநீர் விநியோகம் செய்ய வேண்டும்  என விவசாயத் தொழிலாளர் சங்கம் கோரிக்கை விடுத்துள் ளது. ஈரோடு மாவட்டம், மொடக்குறிச்சி வட்டம், எழு மாத்தூர் ஊராட்சிக்குட்பட்ட செல்வநகர், கணபதி நகர்  பகுதிகளில் வசிக்கும் சுமார் 40 குடும்பத்தினர் கடந்த  ஒரு மாத காலமாக குடிநீரின்றி மிகுந்த சிரமத்துக் குள்ளாகியுள்ளனர். ஜல்ஜீவன் திட்டத்தின் கீழ் வீடுக ளுக்கு தனி இணைப்பு வழங்கப்பட்டு வந்த நிலையில்,  தற்போது தண்ணீர் விநியோகம் நிறுத்தப்பட்டதே இந்த  அவலநிலைக்குக் காரணம் என அப்பகுதி மக்கள் தெரி விக்கின்றனர். கணபதி நகரில் வசிக்கும் பெரும்பாலானோர் விவசா யக் கூலித் தொழிலாளர்கள். தினசரி கூலி வேலைக்குச்  சென்று வருபவர்கள் என்பதால், தண்ணீர் பற்றாக் குறை அவர்களின் அன்றாட வாழ்க்கையைப் பெரிதும்  பாதித்துள்ளது. அருகிலுள்ள விவசாயக் கிணறுகளுக் குச் சென்று தண்ணீர் எடுத்துவரும் நிலை ஏற்பட்டுள் ளதால், அவர்களின் வேலை நேரம் மற்றும் சிரமம் அதிக ரித்துள்ளது. ஜல்ஜீவன் திட்டம் அமலாக்கப்படுவதற்கு முன்பு,  இந்தப் பகுதியில் ஆழ்துளைக் கிணறு அமைத்து, சிண்டெக்ஸ் தொட்டியில் தண்ணீர் நிரப்பி மக்களுக்கு  விநியோகம் செய்யப்பட்டு வந்தது. ஆனால், ஜல்ஜீவன்  திட்டம் வந்த பிறகு, இந்தப் பழைய குடிநீர் வசதி கண்டு கொள்ளப்படாமல் கைவிடப்பட்டது. தற்போது ஜல் ஜீவன் திட்டமும் செயல்படாத நிலையில், பழைய  தண்ணீர் தொட்டியாவது பயன்பாட்டில் இருந்திருந்தால்  சிரமம் குறைந்திருக்கும் என அப்பகுதி மக்கள் ஆதங் கப்படுகின்றனர். இந்தக் குடிநீர் பிரச்சனை குறித்து அகில இந்திய  விவசாயத் தொழிலாளர் சங்கத்தின் மொடக்குறிச்சி ஒன் றியச் செயலாளர் டி.தங்கவேல், மாவட்ட ஆட்சியர் மற் றும் வருவாய்த் துறை அதிகாரிகளுக்கு மனு அனுப்பி யுள்ளார். விரைந்து நடவடிக்கை எடுத்து கணபதி நகர்  மக்களின் குடிநீர் தேவையை பூர்த்தி செய்ய வேண்டும்  என்பதே அனைவரின் கோரிக்கையாக உள்ளது.

தண்ணீர் தொட்டியில் தவறி விழுந்த யானை உயிரிழப்பு

கோவை, ஜூலை 31- காருண்யாநகர் அருகே விவசாய தோட்டத்தில் இருந்த 25 அடி தண்ணீர் தொட்டியில் தவறி விழுந்த ஆண்  காட்டு யானை உயிரிழந்தது. கோவை ஆர்.எஸ் புரம் பகுதியை சேர்ந்தவர் நிர்மலா  தேவி (55). இவருக்கு கோவை காருண்யா நகர், சப்பானி மடையில் சுமார் 10 ஏக்கர் தென்னந்தோப்பு உள்ளது.  அதனை பாலாஜி என்பவர் குத்தகைக்கு பெற்றுள் ளார். இந்நிலையில், வியாழனன்று அதிகாலை வனப் பகுதியில் இருந்து வெளியேறிய காட்டு யானைகள், வழி  தவறி இவரின் தோட்டத்தின் வழியே சென்றுள்ளது. அப் போது சுமார் 10 வயது, ஆண் காட்டு யானை அங்கு,  பயன்பாட்டில் இல்லாமல் கைவிடப்பட்ட சுமார் 25  அடி ஆழமுள்ள தண்ணீர் தொட்டிக்குள் தவறி விழுந்துள் ளது. தொட்டியில் 20 அடி ஆழத்திற்கு தண்ணீர் இருந்துள் ளது. இந்நிலையில் அவ்வழியாக ரோந்து சென்ற  வனத்துறையினர் பார்த்தபோது, தண்ணீர் தொட்டியில்  உயிரிழந்த நிலையில் யானை இருந்தது தெரிய வந்தது. இதையடுத்து உடனடியாக வனத்துறை உயர் அதிகாரிகள் மற்றும் தீயணைப்புத் துறையினருக்கு தக வல் அளித்தனர். சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த  தீயணைப்பு துறையினர் மற்றும் வனத்துறை ஊழி யர்கள், போலீசார் இணைந்து 3 பொக்லைன் இயந்தி ரங்கள் மூலமாக காட்டு யானையை தண்ணீர் தொட்டி யில் இருந்து மீட்கும் பணியில் ஈடுபட்டனர். சுமார் 3 மணி நேரம் போராடி, தண்ணீர் தொட்டியில் இறந்த நிலை யில், இருந்த காட்டு யானை உடல் மீட்டனர். பின்னர்  யானையின் உடல் டிப்பர் லாரி மூலம் சாடிவயல் வனப் பகுதிக்கு எடுத்துச் செல்லப்பட்டு கால்நடை மருத்துவர் குழுவினர் முன்பு பிரேத பரிசோதனை நடைபெற்றது.