மக்கள் போராளி வி.பி.சாமிநாதன் 6 ஆம் ஆண்டு நினைவு நாள்
திருப்பூர், அக்.22- மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் முன்னாள் திருப்பூர் வடக்கு ஒன்றியக்குழு உறுப்பினர் தோழர் வி.பி.சாமிநாதனின் 6 ஆம் ஆண்டு நினைவு தினம் புதனன்று கடைப்பிடிக்கப் பட்டது. மக்கள் போராளி தோழர் வி.பி.சாமிநாதனின் 6 ஆம் ஆண்டு நினைவு நாள் புகழஞ்சலி கூட்டம் பெருமாநல்லூர் கட்சி அலுவலகம் முன்பு நடைபெற்றது. இந்த கூட்டத்திற்கு கட்சியின் ஈட்டிவீரம்பாளையம் கிளைச் செயலாளர் கே. சுப்பிரமணியம் தலைமை வகித்தார். இதில் மாவட்டச் செய லாளர் சி.மூர்த்தி, ஒன்றியச் செயலாளர் ஆர்.காளியப்பன், தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாவட்ட துணைச் செயலாளர் எஸ்.வெங்கடாசலம் ஆகியோர் நினைவுரையாற்றினர். இதில், ஒன்றியக்குழு உறுப்பினர்கள் பி.கே.கருப்பசாமி, என். இளங்கோ, வள்ளிபுரம் முன்னாள் ஊராட்சி மன்றத் தலைவர் வி.என்.முருகேசன் உட்பட கட்சி கிளைச் செயலாளர்கள், பொதுமக்கள் என திரளானோர் பங்கேற்றனர். அதேபோல் வலசுபாளையத்திலும் நினைவு தினம் கடைப்பிடிக்கப்பட் டது.
