ஓய்வூதியர்கள் ஆர்ப்பாட்டம்
ஈரோடு, அக்.4- ஈரோட்டில் சனியன்று நடைபெற்ற ஓய்வூ தியர் சங்கத்தின் ஆர்ப்பாட்டத்தில் பலர் கலந்து கொண்டனர். உலக முதியோர் தினத்தையொட்டி மத்திய, மாநில மற்றும் பொதுத்துறை ஓய்வூ தியர் அமைப்புகளின் ஒருங்கிணைப்புக் குழுவின் சார்பில் சனியன்று ஈரோடு தலைமை அஞ்சலக வளாகத்தில் ஆர்ப்பாட் டம் நடைபெற்றது. ஒருங்கிணைப்புக்குழு மாவட்டத் தலைவர் ஆர்.முருகேசன் தலைமை வகித்தார். மாவட்டச் செயலாளர் பி.சின்னசாமி, கோட்டப் பொருளாளர் வி.கே. பழனிவேல், சேலம் கோட்ட ரயில்வே ஓய்வூ தியர் சங்க செயலாளர் சி.முருகேசன், ஒருங் கிணைப்புக்குழு பொருளாளர் சி.வெள்ளி யங்கிரி உட்பட பலர் கலந்து கொண்டனர். கண்ணியமான ஓய்வூதியம் வழங்க வேண் டும். தரமான மருத்துவ சேவை வழங்க வேண் டும். தொடர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள போக்குவரத்து ஊழியர், ஓய்வூதியர்களின் கோரிக்கைகளை நிறைவேற்ற வேண்டும் என வலியுறுத்தப்பட்டது. முடிவில், வங்கி ஓய்வூதியர் சங்க நிர்வாகி ஆர்.பூபேந்திரன் நன்றி கூறினார்.
