tamilnadu

img

திருப்பூரில் பாலஸ்தீன ஒருமைப்பாட்டு ஆர்ப்பாட்டம்

திருப்பூரில் பாலஸ்தீன ஒருமைப்பாட்டு ஆர்ப்பாட்டம்

திருப்பூர், செப். 8 -  செப்டம்பர் 8ஆம் தேதி பாலஸ்தீனர்களுக்கு ஆதரவு  இயக்கங்களை நடத்த வேண்டும் என்று சர்வதேசத் தொழிற்சங்கச் சம்மேளனத்தின் கீழ் செயல்படும் தொலைத் தொடர்பு, அஞ்சல் மற்றும் நிதிச் சேவை தொழிற்சங்கங்கள் அறைகூவல் விடுத்திருந்தன. பாலஸ்தீன மக்களுக்கு ஆதரவு தெரிவித்து ஒருமைப்பாட்டு தினம் கடைப்பிடிக்க வேண்டும் என அழைப்பு விடுத்திருந்தனர். அதை ஏற்று  பிஎஸ்என்எல் ஊழியர் சங்கம் திருப்பூர் மெயின் தொலைபேசி  நிலையம் முன்பு திங்களன்று மாபெரும் ஆர்ப்பாட்டம் நடத்தியது. பிஎஸ்என்எல் ஊழியர் சங்க கிளைச் செயலாளர்  அருண்குமார் வரவேற்றார். அகில இந்திய தொலைத் தொடர்பு பிஎஸ்என்எல் ஓய்வு பெற்றோர் சங்கத்தைச் சேர்ந்த  குமரவேல் தலைமை ஏற்றார். பிஎஸ்என்எல் ஊழியர் சங்க  கிளைத் தலைவர் அண்ணாதுரை, ஓய்வு பெற்றோர் அமைப்பு  நிர்வாகி சௌந்தரபாண்டியன், சுப்பிரமணியன், ஜாபர், ஒப் பந்தத் தொழிலாளர் சங்க நிர்வாகி ரமேஷ் ஆகியோர் உரை யாற்றினர். திரளானோர் கலந்து கொண்டனர். பிஎஸ்என்எல்  ஊழியர் சங்கக் கிளைச் செயலாளர் அருண்குமார் நிறைவுரை  ஆற்றினார்.