நம்ம பஸ்தான் அனைத்தையும் ஓவர் டேக் செய்யும்!
துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் பேச்சு
சேலம், செப்.17- ஒவ்வொருவரும் ஒரு கலர் பஸ்சை பிடித்துக்கொண்டு செல்கிறார்கள். ஆனால் நம்ம பஸ்தான் அனைத்தை யும் ஓவர் டேக் செய்யும் என சேலத்தில் நடைபெற்ற நிகழ்வில், தமிழ்நாடு துணை முதலமைச்சர் உதயநிதி பேசி னார். சேலத்தில் மகளிர் சுய உதவிக் குழுக்களுக்கு ரூ.3,500 கோடி வங்கிக் கடன் இணைப்புகள் மற்றும் அடையாள அட்டைகள் வழங்கும் விழாவில் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பங் கேற்று பேசுகையில், மகளிர் சுய உத விக் குழுக்களை இந்தியாவிலேயே முதன்முறையாகத் தொடங்கியது தமிழ் நாடுதான். தற்போது முதன்முறையாக அவர்களுக்கு அடையாள அட்டைகள் வழங்கப்பட்டுள்ளது. இந்த அடையாள அட்டை மூலம் மகளிர் தங்கள் தயாரிப் புப் பொருட்களை 100 கி.மீ. வரை அர சுப் பேருந்துகளில் கட்டணம் இல்லாமல் கொண்டு செல்லலாம். மேலும், ஆவின், கோ-ஆப் டெக்ஸ், முதல்வர் மருந்தகம் போன்ற இடங்களில் பிரத்யேக சலுகை களையும் பெறலாம். சிலர் நமது திட்டங்களை விமர்சித் துக் கொண்டிருக்கிறார்கள். ஒவ்வொரு வரும் ஒரு கலர் பஸ் எடுத்துக் கொண்டு போகிறார்கள். ஆனால், இறுதியில் அனைத்தையும் ஓவர்டேக் செய்து வெற்றி பெறப் போவது இளஞ்சிவப்பு நிறப் பேருந்து (பிங்க் கலர் பஸ்) தான்,” என்று மகளிர் கட்டணமில்லா பய ணிக்கும் பேருந்துகளைக் குறிப்பிட் டார். விழாவில் சுற்றுலாத்துறை அமைச் சர் இரா. இராஜேந்திரன், நாடாளு மன்ற உறுப்பினர்கள் டி.எம். செல்வ கணபதி, கே.இ. பிரகாஷ், சட்டமன்ற உறுப்பினர்கள், மாவட்ட ஆட்சியர் பிருந்தாதேவி மற்றும் அரசு அலுவலர் கள் கலந்துகொண்டனர். இதையடுத்து, சேலம் மாவட்ட ஆட் சியர் அலுவலக வளாகத்தில், மாற் றுத்திறனாளிகள் பயன்பாட்டிற்கான 12 புதிய தாழ்தளப் பேருந்துகளையும், மகளிர் விடியல் பயணம் செய்யும் 5 புதிய நகரப் பேருந்துகளையும் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் கொடி யசைத்து தொடங்கி வைத்தார். மேலும், பள்ளி, கல்லூரி மாணவ மாண விகள் மற்றும் பொதுமக்கள் பயன் பெறும் வகையில் 2 பேருந்துகளின் வழித்தடங்களை மாற்றியும், 8 பேருந்து களின் வழித்தடங்களை நீட்டித்தும், ஒரு பேருந்துக்கு கூடுதல் வசதியையும் தொடங்கி வைத்தார்.
