tamilnadu

கோயம்புத்தூர் விரைவு செய்திகள்

யானை தாக்குதலில் ஒருவர் காயம்

ஈரோடு, அக்.12- பர்கூர் மலைப்பகுதியில் யானை தாக்கியதில் மாடு மேய்க்க சென்ற தொழிலாளி காயமடைந்தார். ஈரோடு மாவட்டம், அந்தியூர் அருகே உள்ள பர்கூர், தாமரைக்கரையை அடுத்த ஒந்தனையைச் சேர்ந்தவர் மூர்த்தி  (40). கூலித் தொழிலாளியான இவர், சனியன்று வழக்கம் போல வனத்தை ஒட்டியுள்ள பகுதியில் மாடு மேய்க்க சென் றார். மாலையில் வீடு திரும்பிக் கொண்டிருந்தபோது, வனத்தி லிருந்து வெளியேறிய ஒற்றை ஆண் யானை, மூர்த்தியை தாக்கி, தூக்கி வீசிவிட்டு சென்றது. இதில், காயமடைந்த மூர்த்தியின் அலறலை கேட்ட அப்பகுதியினர், அவரை மீட்டு  அந்தியூர் அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். தொடர்ந்து, முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டு, உயர்  சிகிச்சைக்காக ஈரோடு மருத்துவக்கல்லூரி மருத்துவ மனைக்கு அனுப்பிவைக்கப்பட்டார். இதுகுறித்து பர்கூர் காவல் துறையினர், வனத்துறையினர் விசாரித்து வரு கின்றனர். இதனிடையே, மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் மூர்த்தியை, அந்தியூர் சட்டமன்ற உறுப்பி னர் ஏ.ஜி.வெங்கடாச்சலம் நேரில் சந்தித்து ஆறுதல் கூறி னார். தொடர்ந்து, சிகிச்சை முறைகள் குறித்து மருத்து வர்களிடம் கேட்டறிந்தார்.

கட்டபெட்டு வனச்சரகத்தில் சிறுத்தை உயிரிழப்பு

உதகை, அக்.12- கட்டபெட்டு வனச்சரகத்திற்குட்பட்ட பகுதியில் உயிரி ழந்து கிடந்த சிறுத்தையின் உடலை வனத்துறையினா் மீட்டு  எரியூட்டினர். நீலகிரி மாவட்டம், கட்டபெட்டு வனச்சரகத்திற்குட்பட்ட நெல்லிமந்து அருகே சிறுத்தை ஒன்று உயிரிழந்து கிடப்ப தாக வனத்துறையினருக்கு தகவல் கிடைத்தது. அதன் பேரில், உதவி வனப் பாதுகாவலா் ஆ.மணிமாறன் தலைமை யில், முதுமலை புலிகள் காப்பக உதவி வனக்கால்நடை மருத்துவர் கே.ராஜேஷ்குமார் மற்றும் கக்குச்சி உதவிக்  கால்நடை மருத்துவர் ரேவதி ஆகியோர் கொண்ட குழுவினர், சிறுத்தையின் உடலை சனியன்று உடற்கூறாய்வு செய்த னர். இதில் இறந்தது பெண் சிறுத்தை என தெரியவந்தது. உடற்கூறாய்வு மாதிரிகள் சேகரிக்கப்பட்டு, தடய அறிவி யல் ஆய்வுக்காக அனுப்பி வைக்கப்பட்டன. அதன் முடிவு கள் கிடைத்த பின்பே சிறுத்தையின் இறப்புக்கான காரணம்  தெரியவரும் என்று வனத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ள னர். இதன்பின் வன ஆர்வலர்கள் முன்னிலையில் சிறுத்தை யின் உடல் எரியூட்டப்பட்டது.

முதுமலையில் யானை உயிரிழப்பு

உதகை, அக்.12- நீலகிரி மாவட்டம், முதுமலை புலிகள் காப்பகத்திற்குட் பட்ட கார்குடி வனச்சரகம், கல்லள்ளா பள்ளம் பகுதியில் வனப் பணியாளர்கள் ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்தனர். அப் போது, வனப்பகுதியில் யானையின் சடலம் கிடப்பதை கண்டு,  உயர் அதிகாரிகளுக்கு தகவல் கொடுத்தனர். அதன்பேரில், முதுமலை புலிகள் காப்பக துணை இயக்குநர் வெங்க டேஷ் பிரபு, வனக்கால்நடை மருத்துவர் ராஜேஷ்குமார் உள் ளிட்டோர் சம்பவ இடத்திற்கு சென்றனர். இதுதொடர்பாக வனத்துறையினர் கூறுகையில், உயிரிழந்து கிடந்த பெண் யானைக்கு வயது சுமார் 35 இருக்கலாம். இறந்து பல  நாட்கள் ஆனதால், அதன் எழும்புகள் மட்டுமே கிடைத்தன.  யானையின் இறப்புக்கான காரணம் அறிய முடியவில்லை, என்றனர்.

மலைப்பாதையில் மண்சரிவு: போக்குவரத்து பாதிப்பு

சேலம், அக்.12- கெங்கவல்லி அருகே மலைப்பாதையில் ஏற்பட்ட மண்சரிவால், சுமார் 8 மணி நேரம்  போக்குவரத்து பாதிக்கப்பட்டது. சேலம் மாவட்டம், கெங்கவல்லி ஒன்றி யம், தம்மம்பட்டி அருகே பச்சமலை ஊராட்சி யில் பெரியபக்களம், நல்லமாத்தி, ஓடைக் காட்டுப்புதூர், கொடுங்கல் உள்ளிட்ட 20க்கும்  மேற்பட்ட மலைக்கிராமங்கள் உள்ளன. இப்பகுதிகளுக்கு மலையடிவாரத்தில் உள்ள உப்பிலியாபுரம் அருகே சோபனபுரத் திலிருந்து பச்சமலையிலுள்ள டாப் செங் காட்டுப்பட்டி செல்லும் சாலை வழியாக 13  கொண்டை ஊசி வைளைவுகளை கடந்து  செல்ல வேண்டும். மேலும், இந்த மலையில்  பெரும்பாலான கிராமங்கள் திருச்சி மாவட்ட  எல்லைப் பகுதியில் உள்ளன. இப்பகுதியில் வெள்ளியன்று இரவு முதல்  சனியன்று அதிகாலை வரை பலத்த மழை  பெய்தது. இதனால் அதிகாலை 5 மணி அள வில் 7 மற்றும் 8 ஆவது கொண்டை ஊசி வளை வுகளுக்கு இடைப்பட்ட மலைப் பகுதியில் நீர் இடி விழுந்ததாகத் தெரிகிறது. இதில் அந்த  சாலை வளைவில் 60 மீட்டர் தொலைவுக்கு  மண்சரிவு ஏற்பட்டு, மரம், செடிகள் வேரோடு  சாய்ந்தன. இதுகுறித்து தகவலறிந்த துறை யூர் வனத்துறையினர் விரைந்து சென்று, சாலையின் குறுக்கே ஏற்பட்ட மண் சரிவை  பொக்லைன் இயந்திரம் மூலம் சீரமைக்கும்  பணியில் ஈடுபட்டனர். மேலும், போக்குவ ரத்திற்கு இடையூறாக இருந்த செடிகள், மண் மேடுகள் முழுமையாக அகற்றப்பட்ட தைத்தொடர்ந்து, போக்குவரத்து சீரானது. மண் சரிவால் பச்சமலையிலுள்ள மலைக் கிராமங்களுக்கு வாகனப் போக்குவரத்து சுமார் 8 மணிநேரம் பாதிக்கப்பட்டது.

சேலம் வழியாக சிறப்பு ரயில்கள் இயக்கம்

சேலம், அக்.12- தீபாவளி பண்டிகையையொட்டி திருவ னந்தபுரம், மங்களூரு, போத்தனூரில் இருந்து சென்னைக்கு சிறப்பு ரயில்கள் இயக் கப்படுகின்றன. இதுகுறித்து சேலம் ரயில்வே கோட்டம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், தீபா வளி பண்டிகையையொட்டி, கூட்ட நெரி சலை தவிர்க்கும் வகையில் திருவனந்தபு ரம், மங்களூரு, போத்தனூரில் இருந்து சேலம் வழியாக சென்னைக்கு சிறப்பு ரயில் கள் இயக்கப்படுகின்றன. அதன்படி, போத்த னூர் - சென்னை சென்ட்ரல் இடையே சிறப்பு  ரயில் வரும் அக்.19 தேதி இயக்கப்படுகிறது. இந்த ரயில் போத்தனூரில் இரவு 11.20 மணிக்கு புறப்பட்டு, திருப்பூர், ஈரோடு, சேலம் வழியாக மறுநாள் காலை 8.45  மணிக்கு சென்னை சென்ட்ரலை அடையும். மறுமார்க்கத்தில், சென்னை சென்ட்ரலில் இருந்து அக்.22 ஆம் தேதி நண்பகல் 12.15  மணிக்கு புறப்பட்டு, இரவு 10 மணிக்கு போத் தனூரை அடையும். இதேபோல, சென்னை  சென்ட்ரல் - மங்களூரு இடையே வரும்  அக்.20 ஆம் தேதி சிறப்பு ரயில் இயக்கப்படு கிறது. இந்த ரயில், சென்னை சென்ட்ரல் ரயில்  நிலையத்திலிருந்து நண்பகல் 12.15 மணிக்கு  புறப்பட்டு, சேலம், ஈரோடு, திருப்பூா் வழியாக  மறுநாள் காலை 11 மணிக்கு மங்களூரு சென்ற டையும். மறுமார்க்கத்தில், மங்களூரு -  சென்னை சென்ட்ரல் சிறப்பு ரயில் அக்.21  ஆம் தேதி மாலை 4.35 மணிக்கு புறப்பட்டு, மறு நாள் காலை 10.15 மணிக்கு சென்னை சென்ட் ரலை அடையும். இதேபோல, திருவனந்தபுரம் வடக்கு -  சென்னை எழும்பூர் இடையே அக்.21 ஆம்  தேதி இயக்கப்படும் சிறப்பு ரயில் திருவனந்த புரம் வடக்கில் இருந்து மாலை 5.10 மணிக்கு  புறப்பட்டு, கொல்லம், கோட்டயம், எர்ணா குளம், பாலக்காடு, போத்தனூர், திருப்பூர், சேலம் வழியாக மறுநாள் காலை 11 மணிக்கு சென்னை எழும்பூரை சென்றடையும். மறு மார்க்கத்தில், சென்னை எழும்பூரில் இருந்து  அக்.22 ஆம் தேதி பிற்பகல் 1.25 மணிக்கு  புறப்பட்டு, மறுநாள் காலை 8 மணிக்கு திருவ னந்தபுரம் வடக்கு ரயில் நிலையத்தை அடை யும். இந்த சிறப்பு ரயில்களுக்கான முன்பதிவு  ஞாயிறன்று தொடங்கியது குறிப்பிடத்தக் கது.

அணைகள் நிலவரம்

மேட்டூர் அணை நீர்மட்டம்:115/120அடி நீர்வரத்து:59123கனஅடி நீர்திறப்பு:12500கனஅடி பரம்பிக்குளம் அணை நீர்மட்டம்:71.25/72அடி நீர்வரத்து:710கனஅடி நீர்திறப்பு:1110கனஅடி சோலையார் அணை நீர்மட்டம்:157/160 அடி நீர்வரத்து:329.62கனஅடி நீர்திறப்பு:451.96கனஅடி ஆழியார் அணை நீர்மட்டம்:119/120அடி நீர்வரத்து:389கனஅடி நீர்திறப்பு:552கனஅடி திருமூர்த்தி அணை  நீர்மட்டம்:38.55/60அடி  நீர்வரத்து:900கனஅடி நீர்திறப்பு:1056கனஅடி