tamilnadu

img

சத்துணவு ஊழியர் சங்கம் ஆர்ப்பாட்டம்

சத்துணவு ஊழியர் சங்கம் ஆர்ப்பாட்டம்

கோவை, அக்.8- கோரிக்கை மனுக்கள் மீது உரிய காலத்தில் பதில் வழங்க வேண்டும் என சத்துணவு ஊழியர் சங்கத்தினர் கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். ஐந்தாண்டு பணி நிறைவு செய்த  சத்துணவு மைய உதவியாளர்க ளுக்கு சமையலர் பதவி உயர்வு வழங்க வேண்டும். காலிப்பணி இடங்களில் பணி மாறுதல் வழங்க  சமூகநல ஆணையர் உத்தரவிட்டு  இருந்தும் மாறுதல் மறுக்கப்படுகி றது. எனவே காலிப் பணி இடங்க ளில் மாறுதல் கேட்பவர்களுக்கு மாறுதல் தாமதமின்றி வழங்க வேண்டும். நேர்முக தேர்வில் தேர்வு  செய்யபட்டவர்களை உடனடியாக  பணி அமர்த்த வேண்டும். பணி  ஓய்வுபெறும் அல்லது பணி ஓய்வு பெற்ற சத்துணவு ஊழியர்களுக்கு சிறப்பு சேமநல நிதி (SPF) மற்றும்  பொது வருங்கால வைப்பு நிதி  (GPF) தொகை பணி ஓய்வுபெறும் நாளிலேயே வழங்க வேண்டும். கோரிக்கை மனுக்கள் மீது உரிய காலத்தில் பதில் வழங்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலி யுறுத்தி தமிழ்நாடு சத்துணவு ஊழி யர் சங்கத்தினர் புதனன்று கோவை  மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அரு கில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இந்த ஆர்ப்பாட்டத்திற்கு சங்க மாவட்டத் தலைவர் என்.பானு லதா தலைமை தாங்கினார். தமிழ் நாடு அரசு ஊழியர் சங்க மாவட் டத் தலைவர் ச.ஜெகநாதன் மற்றும்  சத்துணவு ஊழியர் சங்க மாவட்டச்  செயலாளர் ஏ.லதா துவக்க உரை யாற்றினார்.  போராட்டத்தை வாழ்த்தி, தமிழ் நாடு அரசு ஊழியர் சங்க மாவட்டச் செயலாளர் பி.செந்தில்குமார், சத் துணவு ஓய்வூதியர் சங்க மாநி லத் தலைவர் கேபழனிச்சாமி உள் ளிட்ட சகோதர சங்கங்களின் நிர் வாகிகள் உரையாற்றினர். தமிழ் நாடு சத்துணவு ஊழியர் சங்க மாநில  பொதுச் செயலாளர் ஏ.ஜெசி நிறை வுரையாற்றனார். முடிவில் மாவட் டப் பொருளாளர். பி.சுதா நன்றி கூறி னார். ஆர்ப்பாட்டத்தில் திரளா னோர் பங்கேற்றனர்.