tamilnadu

img

நாற்றங்காலில் புதிய நோய் தாக்குதல் வேளாண்மைத் துறையினர் ஆய்வு

நாற்றங்காலில் புதிய நோய் தாக்குதல் வேளாண்மைத் துறையினர் ஆய்வு

நாமக்கல், செப்.15- நாமக்கல் மாவட்டம், குமாரபாளையம் அருகே தட் டான்குட்டை ஊராட்சி, வீரப்பம்பாளையம் பகுதியில் நாற்றங்காலில் ஏற்பட்டுள்ள புதிய நோய் தாக்குதல் குறித்து வேளாண்மைத் துறையினர் நேரில் ஆய்வு செய்தனர். இதுகுறித்து அப்பகுதியைச் சேர்ந்த விவசாயி விஸ் வநாதன் கூறுகையில், “எங்கள் பகுதியில் ஆயிரக்கணக் கான ஏக்கர் நிலங்களில் விவசாயிகள் நாற்றுக்கள் விட் டுள்ளோம். இந்த நாற்றுகள் நடவுக்குத் தயாராக இருந்த  நிலையில், திடீரென சிவப்பு நிற நோய் தாக்கி வரு கிறது. இதனால் மிகுந்த கவலையில் உள்ளோம். இந்த  நோய் தாக்குதல் காரணமாக, பல ஆயிரம் ஏக்கர் விவ சாய நிலங்களில் பயிர் நடவுப் பணிகள் நிறுத்தி வைக் கப்பட்டுள்ளன. விவசாயிகளின் கவலையைப் போக்கி,  பயிர் நடவுப் பணிகளை மீண்டும் தொடங்க வேளாண் மைத் துறை அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுக்க  வேண்டும்” என்று கோரிக்கை விடுத்தார். இதனைத் தொடர்ந்து, வேளாண்மைத் துறை உதவி  இயக்குநர் மாயஜோதி, துணை வேளாண்மை அலுவ லர் நிஷா, வேளாண்மை உதவி இயக்குநர் சத்திய பிர காஷ் உள்ளிட்ட அதிகாரிகள் கொண்ட குழுவினர், பாதிக் கப்பட்ட நாற்றங்கால்களை நேரில் பார்வையிட்டு ஆய்வு  மேற்கொண்டனர். ஆய்வுக்குப் பின் உதவி இயக்குநர் மாயஜோதி செய்தியாளர்களிடம் பேசுகையில், “நாற்றங்காலில் ஏற் பட்டுள்ள இந்த நோய், பொதுவாக ஏற்படும் ‘ரைஸ் பிளாஸ்ட்’ அல்லது ‘இலை கருகல் நோய்’ ஆக இருக் கலாம். இந்த நோய் தாக்கிய நாற்றுகளில் இலைக ளில் சிவப்பு அல்லது பழுப்பு நிறப் புள்ளிகள் தோன்றும்.  சரியான நேரத்தில் உரிய மருந்து தெளிப்பதன் மூலம் இந்த நோயைக் கட்டுப்படுத்த முடியும். இது குறித்து விவ சாயிகளுக்குத் தேவையான ஆலோசனைகள் வழங் கப்பட்டுள்ளன. நோய்த்தாக்குதலுக்குள்ளான நாற்று களையும் சரியான நேரத்தில் நடவு செய்யலாம். இத னால் பயிர் உற்பத்திக்கு எந்தவித பாதிப்பும் ஏற்படாது”  என்று தெரிவித்தார். மேலும், விவசாயிகள் இதுபோன்ற நோய்த்தாக்கு தல்களைக் கண்டறிந்தால் உடனடியாக அருகிலுள்ள வேளாண்மைத் துறை அலுவலகத்தைத் தொடர்பு கொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது. விவசாயிகள் அச்சப்படத் தேவையில்லை என்றும், வேளாண்மைத் துறை தொடர்ந்து கண்காணித்து வருவதாகவும் அதி காரிகள் உறுதி அளித்தனர்.