பொள்ளாச்சி நகராட்சியில் புதிய ஆணையாளர் பொறுப்பேற்பு
பொள்ளாச்சி,செப்.1 – பொள்ளாச்சி நகராட்சி யின் புதிய ஆணையாள ராக குமரன் திங்களன்று பொறுப்பேற்றுக் கொண் டார். முன்னதாக, நகராட்சி ஆணையாளராகப் பணி யாற்றி வந்த கணேசன் பணி யிட மாற்றம் செய்யப்பட்டார். இதைத்தொடர்ந்து, புதிய ஆணையாளராகப் பொறுப்பேற்ற குமரனுக்கு, நகர மன்றத் தலைவர் சியாமளா நவநீதகிருஷ்ணன், துணைத் தலைவர் கௌதமன், நகர மன்ற உறுப்பினர்கள் மற்றும் நகராட்சி அதிகாரிகள் ஆகியோர் பொன்னாடை போர்த்தி வாழ்த்து தெரிவித்தனர். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய ஆணையா ளர் குமரன், “பொள்ளாச்சி நகராட்சிக்குட்பட்ட பகுதி களைத் தூய்மையாக வைத்திருக்கவும், பொது மக்களின் கோரிக்கை மற்றும் புகார் மனுக்கள் மீது விரைந்து உரிய நடவடிக்கை எடுக்கவும் முன்னுரிமை அளிப்பேன்” என்றார்.
