tamilnadu

img

நிலத்திற்கான மதிப்பை நிர்ணயிக்கக் கோரி விவசாயிகள் போராட்டத்தையடுத்து பேச்சுவார்த்தை

நிலத்திற்கான மதிப்பை நிர்ணயிக்கக் கோரி விவசாயிகள் போராட்டத்தையடுத்து பேச்சுவார்த்தை

ஈரோடு, செப். 16- நிலத்திற்கான மதிப்பு பூஜ்ஜியம் என்பதை மாற்றி மதிப்பை நிர்ண யிக்க வேண்டும் என அந்தியூர் வட் டாட்சியர் அலுவலகத்தை முற்றுகை யிட்ட நிலையில், விவசாயிகளுடன் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது. ஈரோடு மாவட்டம், அந்தியூர் வனப்பகுதியை ஒட்டியுள்ள சுமார்  3500 ஏக்கர் நிலங்கள் நிபந்தனை  பட்டாவாகவும், பூஜ்ஜியம் மதிப்பி லானதாகவும் மாற்றப்பட்டது. நிபந் தனை பட்டாக்களில் பொது மற்றும்  எஸ்சி/எஸ்டி பிரிவுகளும் அடங்கும்.  கடந்த 2015-16 ஆம் ஆண்டில் இவ் வாறு மாற்றப்பட்ட நிலங்களை விற்கவோ, வேறு பயன்பாடுகளுக்கு  மாற்றவோ முடியாமல் ஏராளமா னோர் பாதிக்கப்பட்டனர். இது குறித்து பல்வேறு முறையீடுகள்,  போராட்டங்களிலும் ஈடுபட்டனர்.  இந்நிலையில் திங்களன்று மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில்  பங்கேற்று முறையிட தயாரானவர் களை காவல்துறையினர் தடுத்து நிறுத்தினர். இதனால் வட்டாட்சியர் அலுலகத்தில் கூடியவர்கள் நாள்  முழுவதும் முற்றுகையிட்டு தர்ணா வில் ஈடுபட்டனர். வருவாய் கோட் டாட்சியர் மற்றும் சட்டமன்ற உறுப்பி னர் பேச்சுவார்த்தை நடத்தினர். ஆனால் சமரசம் ஏற்படவில்லை. எனவே, செவ்வாயன்று அரசு  பேருந்துகள் மூலம் பாதிக்கப்பட் டோர் மாவட்ட ஆட்சியர் அலுவல கத்திற்கு அழைத்து வரப்பட்டனர். அங்கு மாவட்ட ஆட்சியர் ச.கந்த சாமி தலைமையில் அமைச்சர் சு. முத்துசாமி பேச்சுவார்த்தை நடத்தி னார். அப்போது பாதிக்கப்பட்டவர் கள் தரப்பில் எதற்காக எங்கள் நிலங் கள் கண்டிசன் பட்டாவாக மாற்றப் பட்டது. நிபந்தனையை நீக்க எவ்வ ளவு நாளாகும் எனக் கேள்வி எழுப்பி னர். உங்கள் கோரிக்கைகள் தீர்ப்ப தற்கான நடவடிக்கைகள் எடுக்கப் பட்டுள்ளது. ரயத்துவாரி, அறநிலை யத்துறை, அணை, கால்வாய் என  ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு வகையிலான பிரிவில் சேரும்.  எனவே அனைவரும் தனித்தனியாக  மனு கொடுங்கள். வீடுகளுக்கு வந் தும் மனுக்களைப் பெற்று தீர்வு  காணப்படும் எனத் தெரிவித்தார். இதனையேற்று அனைவரும் வீடு  திரும்பினர். இந்த பேச்சுவார்த்தை யின்போது, மாவட்ட வருவாய் அலு வலர் சாந்தகுமார், சட்டமன்ற உறுப் பினர்கள் ஏஜி.வெங்கடாசலம், சந்திர குமார், உள்ளிட்டோரும் இதில் பங் கேற்றனர்.