tamilnadu

img

சர்வதேச அளவில் தனிச்சிறப்பை பெற்ற நாமக்கல் முட்டைப் பண்ணைத் தொழில்!

சர்வதேச அளவில் தனிச்சிறப்பை பெற்ற  நாமக்கல் முட்டைப் பண்ணைத் தொழில்

இந்திய அளவில் மட்டுமின்றி, சர்வதேச அளவி லும் முட்டை உற்பத்தியில் தனக்கென தனிச் சிறப் பைப் பெற்ற மாவட்டமாகத் நாமக்கல் திகழ்கிறது. சில  ஆயிரம் கோழிகளுடன் தொடங்கப்பட்ட இத்தொழில், இன்று பல ஆயிரம் கோடி ரூபாய் வருவாய் ஈட்டும் பிர மாண்டத் தொழிலாக உருவெடுத்துள்ளது. கடந்த 1969ஆம் ஆண்டில் 100 என்ற எண்ணிக்கை யில் அமைக்கப்பட்ட கோழிப் பண்ணைகள், தற் போது 900 பண்ணைகளாக விரிவடைந்துள்ளன. இப் பண்ணைகளில் சுமார் 5 கோடி கோழிகள் வளர்க் கப்படுகின்றன. இதன் விளைவாக, நாமக்கல் மண்ட லத்தில் தினசரி 3.50 கோடி முட்டைகள் உற்பத்தி செய் யப்படுகின்றன. இது இத்தொழிலின் மாபெரும் வளர்ச் சிக்கு சான்றாக அமைகிறது. இந்தியாவில் கோழிப் பண்ணைகள் உள்ள மாநிலங்கள் 23 மண்டலங்களாகப் பிரிக்கப்பட்டுள்ளன. இவற்றில் மிக முக்கியமான மையமாகத் நாமக்கல் விளங்குகிறது. தமிழகம் மட்டுமல்லாமல், நாட்டின் பல்வேறு மாநிலங்களுக்கும் இங்கிருந்து முட்டைகள் விற்பனைக்கு அனுப்பப்படுகின்றன. சர்வதேச ஏற்றுமதியைப் பொறுத்தவரை, 1993ஆம் ஆண்டில் குவைத்துக்கு முதன்முறையாக 4.50 லட் சம் முட்டைகள் அனுப்பப்பட்டன. ஆரம்பத்தில் மந்த மாக இருந்தபோதும், படிப்படியாக நாமக்கல் முட்டைக்கு உலகளவில் பெரும் வரவேற்பு கிடைத் தது. ஏற்றுமதி படிப்படியாக வளர்ந்து, 2003ஆம் ஆண் டில் ஓமன், கத்தார், பஹ்ரைன், நைஜீரியா, உக் ரைன், ஈரான், சார்ஜா, துபாய், ஆப்கானிஸ்தான் உள் ளிட்ட பல்வேறு நாடுகளுக்கும் விரிவடைந்தது. 2005-2006ஆம் நிதியாண்டில் மட்டும் தினமும் 50 லட்சம் முட்டைகள் வீதம், மாதந்தோறும் சுமார் 12 கோடி முட்டைகள் ஏற்றுமதி செய்யப்பட்டன. ஆனால், 2006 ஆம் ஆண்டின் இறுதியில் வட மாநிலங்களில் ஏற் பட்ட பறவைக் காய்ச்சல் பாதிப்பால், பஹ்ரைன், ஓமன்  தவிர்த்த வளைகுடா நாடுகளில் இந்திய முட்டைக்குத் தடை விதிக்கப்பட்டது. பின்னர், 2012ஆம் ஆண்டில் ஓமன் நாட்டிலும் தடை விதிக்கப்பட்டது. 2017ஆம் ஆண்டில் வளைகுடா நாடுகளில் இந்திய முட்டை மீதான தடை நீக்கப்பட்டது. தற் போது, அமெரிக்கா, பிரேசில், தைவான் போன்ற நாடு களின் முட்டைகளைவிட, இந்திய முட்டைகள், குறிப் பாக நாமக்கல் முட்டைகள், வெளிநாடுகளில் குறைந்த  விலையில் விற்கப்படுகின்றன. நாமக்கல் முட்டை ஏற்றுமதியாளர்கள், “வளை குடா நாடுகளில் இந்திய முட்டைகள் விற்பனைக்கான வாய்ப்பை ஒன்றிய அரசு உடனடியாக ஏற்படுத்திக் கொடுத்தால், தற்போது 5,000 கோடி ரூபாய் வரு வாய் ஈட்டிவரும் இக்கோழிப் பண்ணை தொழில், நிச்சயமாக 10,000 கோடி ரூபாய் அளவுக்கு உய ரும்,” என்று நம்பிக்கை தெரிவிக்கின்றனர். தமிழக நலத் திட்டங்களில் முக்கியப் பங்கு சர்வதேச அளவில் மட்டுமின்றி, உள்நாட்டிலும் நாமக் கல் முட்டையின் தேவை அதிகரித்துள்ளது. தமிழகம் முழுவதும் அரசுப் பள்ளிகளில் செயல்படுத்தப்படும் காலை உணவுத் திட்டம் உள்ளிட்ட மக்கள் நலத் திட் டங்களால் முட்டையின் நுகர்வு அதிகரித்துள்ளது. இதன்  காரணமாக, கடந்த சில ஆண்டுகளாக நாமக்கல்  முட்டைகள் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களுக் கும் அதிக அளவில் அனுப்பப்பட்டு வருவது குறிப் பிடத்தக்கது. நாமக்கல் முட்டை பண்ணைத்தொழிலில் 5 கோடி கோழிகள் உள்ளன, இதன்மூலம் தினசரி முட்டை உற்பத்தி என்பது, 3.50 கோடி ஆகும். ஆரம்ப ஏற்று மதி: 1993 (குவைத்) தற்போதைய வருவாய்: ரூ. 5,000  கோடி எதிர்பார்க்கப்படும் வருவாய்: ரூ. 10,000 கோடி  என்பது குறிப்பிடத்தக்கது