மாதர் சங்க பாப்பிரெட்டிபட்டி வட்ட மாநாடு
தருமபுரி, ஜூலை 24- மாதர் சங்கத்தின் பாப்பிரெட்டிபட்டி வட்ட மாநாட்டில் நிர் வாகிகள் தேர்வு செய்யப்பட்டனர். அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கத்தின் தருமபுரி மாவட்டம், பாப்பிரெட்டிபட்டி வட்ட 8 ஆவது மாநாடு புத னன்று பாப்பிரெட்டிப்பட்டியில் நடைபெற்றது. வட்டத் தலை வர் கண்ணகி தலைமை வகித்தார். சங்கத்தின் கொடியை செந்தாமரை ஏற்றி வைத்தார். மாவட்ட துணைச்செயலாளர் தனலட்சுமி துவக்கவுரையாற்றினார். வட்டச் செயலாளர் கிருஷ்ணவேணி, பொருளாளர் தங்கம் ஆகியோர் அறிக்கை களை முன்வைத்தனர். சிபிஎம் வட்டச் செயலாளர் தி.வ.தனு ஷன், வாலிபர் சங்க மாவட்டத் தலைவர் மா.குறளரசன், வட் டத் தலைவர் குப்பன் ஆகியோர் வாழ்த்திப் பேசினர். இதைத்தொடர்ந்து, சங்கத்தின் வட்டத் தலைவராக இளவரசி, செயலாளராக கிருஷ்ணவேணி, பொருளாளராக தங்கம், துணைத்தலைவராக இந்திரா, துணைச்செயலாளராக கண் ணகி உட்பட 9 பேர் கொண்ட வட்டக்குழு தேர்வு செய்யப்பட் டது. மாவட்டச் செயலாளர் ஆர்.மல்லிகா நிறைவுரையாற்றி னார். இளவரசி நன்றி கூறினார்.