tamilnadu

img

மாதர் சங்க மாநாடுகள்

மாதர் சங்க மாநாடுகள்

உடுமலை, ஜூலை 6- மாதர் சங்கத்தின் உடுமலை நகர, அவிநாசி ஒன்றிய மற்றும் அந்தியூர் தாலுகா மாநாட்டில், நிர்வாகிகள் தேர்வு  செய்யப்பட்டனர். அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கத்தின் திருப் பூர் மாவட்டம், உடுமலை நகர 9 ஆவது மாநாடு, அரசு ஊழியர்  சங்க கட்டட வளாகத்தில் ஞாயிறன்று நடைபெற்றது. சங்கத் தின் நகரத் தலைவர் சுமதி என்ற சத்தியபாமா தலைமை வகித் தார். செயலாளர் டி.சித்ரா அறிக்கையை முன்வைத்தார்.  மாவட்ட துணைத்தலைவர் கே.சரஸ்வதி வாழ்த்திப் பேசி னார். இதைத்தொடர்ந்து சங்கத்தின் நகரத் தலைவ ராக பி.சுமதி (எ) சத்தியபாமா,, செயலாளராக டி.சித்ரா, பொரு ளாளராக துரையம்மாள் உட்பட 9 பேர் கொண்ட நகரக்குழு  தேர்வு செய்யப்பட்டது. மாவட்டச் செயலாளர் பானுமதி நிறை வுரையாற்றினார். இதேபோல, மாதர் சங்கத்தின் அவிநாசி ஒன்றிய 10 ஆவது  மாநாடு, தனியார் திருமண மண்டபத்தில் ஞாயிறன்று  நடைபெற்றது. ஒன்றியத் தலைவர் சித்ரா தலைமை வகித் தார். மாவட்டத் தலைவர் பவித்ராதேவி துவக்கவுரை யாற்றினார். ஒன்றியச் செயலாளர் செல்வி அறிக்கையை முன் வைத்தார். சிஐடியு அவிநாசி பொதுத்தொழிலாளர் சங்க தலை வர் ஈஸ்வரமூர்த்தி, விவசாயிகள் சங்க மாவட்டத் தலைவர்  சண்முகம், விசைத்தறி தொழிலாளர் சங்க மாவட்ட துணைச் செயலாளர் பழனிச்சாமி ஆகியோர் வாழ்த்திப் பேசினர். இதைத்தொடர்ந்து சங்கத்தின் ஒன்றியத் தலைவராக சித்ரா, செயலாளராக கௌரிமணி, பொருளாளராக தங்கமணி, துணைத்தலைவர்களாக செல்வி, கலைச்செல்வி, துணைச்செயலாளர்களாக சம்சத், தேவி உட்பட 12 பேர் கொண்ட ஒன்றியக்குழு தேர்வு செய்யப்பட்டது. மாவட் டப் பொருளாளர் கவிதா நிறைவுரையாற்றினார். ஈரோடு மாதர் சங்கத்தின் ஈரோடு மாவட்டம், அந்தியூர் தாலுகா  4 ஆவது மாநாடு தவுட்டுப்பாளையத்தில் கே.ரமணி நினை வரங்கில் நடைபெற்றது. தாலுகா தலைவர் எம்.பழனியம் மாள் தலைமை வகித்தார். துணைத்தலைவர் எஸ்.சித்தாயி  சங்கத்தின் கொடியை ஏற்றி வைத்தார். மாவட்டத் தலைவர்  பி.எஸ்.பிரசன்னா துவக்கவுரையாற்றினார். பொதுத்தொழி லாளர் சங்க உதவித்தலைவர் ஆர்.முருகேசன், விதொச தாலுகா செயலாளர் ஏ.கே.பழனிசாமி ஆகியோர் வாழ்த் திப் பேசினர். இம்மாநாட்டில், சங்கத்தின் தாலுகா தலைவ ராக எம்.மகேஸ்வரி, செயலாளராக எஸ்.கீதா, பொருளாள ராக எம்.சாந்தாமணி, துணைத்தலைவராக எஸ்.சித்தாயி, துணைச்செயலாளராக ஆர்.காந்திமதி உட்பட 11 பேர்  கொண்ட தாலுகாக்குழு தேர்வு செய்யப்பட்டது. மாவட்டச்  செயலாளர் பா.லலிதா நிறைவுரையாற்றினார். சிவகாமி நன்றி  கூறினார்.