tamilnadu

img

கிட்னியை இழந்த பெண்களுக்கு மாதாந்திர உதவித்தொகை

கிட்னியை இழந்த பெண்களுக்கு மாதாந்திர உதவித்தொகை

மாதர் சங்க நாமக்கல் மாநாடு வலியுறுத்தல்

நாமக்கல், ஆக.31- கிட்னியை இழந்த பெண்க ளுக்கு அரசு சார்பில், மாதாந்திர  உதவித்தொகை வழங்க வேண்டும்  என மாதர் நாமக்கல் மாவட்ட  மாநாட்டில் தீர்மானம் நிறைவேற் றப்பட்டது. அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்க நாமக்கல் மாவட்ட 9  ஆவது மாநாடு, ராசிபுரத்தில் தோழர் மைதிலி சிவராமன் நினைவ ரங்கில் ஞாயிறன்று நடைபெற்றது. மாவட்டத் தலைவர் பி.ராணி,  துணைத்தலைவர் ஜி.பழனியம் மாள், ஒன்றியச் செயலாளர் ராணி பூபதி ஆகியோர் தலைமை வகித்த னர். மூத்த தலைவர் அத்தாயம்மாள்  மாநாட்டு கொடியை ஏற்றி வைத் தார். மோகனப்பிரியா அஞ்சலி தீர் மானத்தை வாசித்தார். நகரச் செய லாளர் பி.ஜீவா வரவேற்றார். மாநில  செயற்குழு உறுப்பினர் உஷா  மாநாட்டை துவக்கி வைத்து உரை யாற்றினார். துணைச்செயலாளர் எம்.செல்வராணி, பொருளாளர் கே.புஷ்பலதா ஆகியோர் அறிக்கைகளை முன்வைத்தனர். இம்மாநாட்டில், குடும்ப வறுமை, கடன் தொல்லைகள் கார ணமாக பெண்கள் தங்களது சிறு நீரகத்தை விற்கும் அவல நிலைக்கு  தள்ளப்பட்டுள்ளனர். அவ்வாறு சிறு நீரகத்தை இழந்த பெண்கள் பல் வேறு இணை நோய்களுக்கு ஆளாகி உரிய மருத்துவரிடம் சென்று சிகிச்சை பெறும் அளவுக்கு வசதியற்ற நிலையில் உள்ளதால் அவதிப்பட்டு வருகின்றனர். எனவே, குமாரபாளையம், பள்ளி பாளையம், திருச்செங்கோடு அரசு  மருத்துவமனைகளிலும். நாமக்கல்  மருத்துவக்கல்லூரி மருத்துவமனை யிலும் அவர்களுக்கான சிறப்பு மருத்துவரை நியமித்து சிறப்பு சிகிச்சை பிரிவை உருவாக்கி தட் டுப்பாடு இல்லாமல் மருந்துகள் வழங்க வேண்டும். மேலும், பாதிக் கப்பட்ட பெண்களுக்கு மாதந் தோறும் அரசு சார்பில் உதவித் தொகை வழங்க வேண்டும். வரதட்சணை கொடுமையால் பெண்கள் உயிரிழக்கும் சம்பவத் திற்கு காரணமானவர்கள் மீது கடும்  நடவடிக்கை எடுக்க வேண்டும். பெண்கள், குழந்தைகள் பாதிக்கப் படும் பொழுது, புகாரளிக்க வரும்  பெண்களின் குறைகளை கேட்ட றிந்து உடனடியாக நடவடிக்கை எடுப்பதை உறுதிப்படுத்த வேண் டும். அணைப்பாளையம் ஏரி புறம் போக்கில் வசித்து வரும் பட்டிய லின மக்களுக்கு மாற்று இடம்  வழங்க வேண்டும் என வலியு றுத்தி அக்.25 ஆம் தேதியன்று காத் திருப்பு போராட்டம் நடத்தவது; ஆர்.புதுப்பாளையம் மயானத்தில் குப்பைக்கழிவுகளை கொட்டி மாசுப்படுத்துவதை கண்டித்து செப் டம்பர் மாதம் மாவட்ட ஆட்சியர்  அலுவலகம் முன்பு பெண்கள்  பாடை சுமக்கும் போராட்டம் நடத்து வது உள்ளிட்ட தீர்மானங்கள் நிறை வேற்றப்பட்டன. இதைத்தொடர்ந்து, சங்கத்தின் நாமக்கல் மாவட்டத் தலைவராக பி.ராணி, செயலாளராக எம்.செல் வராணி, பொருளாளராக கவிதா  பாலகிருஷ்ணன், துணைத்தலைவ ராக ராணி பூபதி, துணைச்செயலா ளராக வி.பிரியா உட்பட மாவட்ட குழு உறுப்பினர்கள் தேர்வு செய் யப்பட்டனர். மத்தியக்குழு உறுப்பி னர் ஆர்.சசிகலா நிறைவுரையாற்றி னார்.