தொழில் கடன் வாங்கித் தருவதாகக்கூறி பணமோசடி
பொள்ளாச்சி, செப்.19- பொள்ளாச்சியில் கூலித்தொழி லாளர்களுக்கு மானியத்துடன் தொழில் கடன் வாங்கித் தருவதாகக் கூறி லட்சக்கணக்கில் மோசடி செய்த வர்கள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி பாதிக்கபட்டவர்கள் காவல் துறை கூடுதல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் முற்றுகையிட்டனர். இதுகுறித்து போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் கூறுகையில், பொள் ளாச்சி அடுத்த வடக்கிபாளையம் பகு தியைச் சேர்ந்த ரூபினிபிரியா மற்றும் ஊஞ்சவேலாம்பட்டி பகுதியைச் சேர்ந்த மல்லிகா. இருவரும், ரூ.2 லட்சம் முதல் ரூ.10 லட்சம் வரை மானி யத்துடன் தொழில் கடன் பெற்று தருவதாகக்கூறி திப்பம்பட்டி, கெடி மேடு உள்ளிட்ட பல்வேறு கிராமங் களைச் சேர்ந்த 180க்கும் மேற்பட்ட கூலித்தொழிலாளர்களிடம் தலா 7,500 ரூபாய் முதல் 31 ஆயிரம் ரூபாய் வரை பெற்றனர். இதில், சுமார் 40 லட்சம் ரூபாய் வரை பணம் பெற்றுள்ளனர். ஆனால் 7 மாதங்களுக்கு மேலாகியும் இது வரை தொழில் கடன் பெற்று தராமல் காலம் தாழ்த்தி வந்ததால் பணம் கொடுத்தவர்கள் பணத்தை திருப்பி கேட்டோம். இதற்கு, முறையாக பதிலளிக்கவில்லை, எனவே நியா யம் கேட்டு காவல்துறை அலுவல கத்திற்கு வந்துள்ளோம், என்றனர். இதனிடையே, புகார் பெற காவல் துறையினர் மறுத்ததாகக் கூறி முற்று கையிட்ட மக்கள் காவல்துறையின ரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் சிறிது நேரம் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. தொழில் கடன் வாங்கி தருவதாக பணம் வாங்கி ஏமாற்றிய பெண்களில் மல்லிகா என்பவரை பிடித்து வந்து ஒப்படைத்த கிராம மக்கள் இதில் முக்கிய நபரான ரூபினி பிரியாவை கைது செய்து பணத்தை மீட்டு தருமாறு கோரிக்கை விடுத் துள்ளனர். இதுகுறித்து போலீசார் தொடர்ந்து விசாரணை மேற் கொண்டு வருகின்றனர். தொடர்ந்து, வெள்ளியன்று பொள்ளாச்சி சார் ஆட்சியர் அலுவலகத்தில் பாதிக்கப் பட்டவர்கள் புகாரளித்தனர்.
