காப்பகத்தில் காணாமல் போன சிறுமிகள் மீட்பு
திருப்பூர், ஜூலை 5- தனியார் காப்பகத்தில் இருந்து காணாமல் போன சிறுமி கள் மீட்கப்பட்டுள்ளனர். மேலும், சிறுமிகள் வெளியே சென்றதற்கான காரணம் குறித்து தனிப்படை அமைத்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். திருப்பூர் பிரிஜ்வே காலனியில் தனியார் காப்பகம் செயல் பட்டு வருகிறது. இதில் மாவட்டத்தின் பல்வேறு இடங்களில் சுற்றித் திரிந்த சிறுமிகள், வழக்குகளில் பாதிக்கப்பட்டோர், ஆதரவற்ற நிலையில் இருப்போர் உட்பட பலர் போலீசார் மற்றும் குழந்தைகள் நலப்பாதுகாப்பு குழுவினரால் மீட்கப் பட்டு தங்க வைக்கப்பட்டு வருகின்றனர். இந்நிலையில் வியா ழனன்று காப்பகத்திலிருந்து 17 வயதுடைய நான்கு சிறுமிகள் மற்றும் வீரம்மாள் (18) உட்பட 5 பேர் காப்பகத்தில் இருந்து காணாமல் போனது தெரியவந்தது. இதைத்தொடர்ந்து சிசி டிவி கேமரா காட்சிகளை சோதனை செய்தபோது 5 பேரும் சுவர் ஏறி குதித்து வெளியே சென்றது தெரியவந்தது. இந்த புகாரின் பேரில் வடக்கு போலீசார் வழக்குப்பதிவு செய்து தனிப்படை அமைத்து விசாரணை மேற்கொண்டு வந்தனர். இதைத்தொடர்ந்து காப்பகத்தில் இருந்து சென்ற சிறுமி ஒரு வர் எங்கே செல்வது என தெரியாமல் கலைஞர் பேருந்து நிலையத்தில் செய்வதறியாது நின்று கொண்டிருந்தார். வெள்ளியன்று அவரை போலீசார் மீட்டு காப்பகத்திற்கு அழைத்துச் சென்றனர். தொடர்ந்து சனியன்று மேலும் 2 சிறுமிகளை தனிப்படை போலீசார் மீட்டனர். காப்பகத்தில் ஏதேனும் கொடுமை நிகழ்த்தப்பட்டதா? அதன் காரணமாக தப்பி சென்றார்களா? அல்லது வேறு ஏதேனும் காரணமா என்பது குறித்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இதுகுறித்து சமூக ஆர்வலர்கள் கூறுகையில், ஆதரவற்ற, வழக்குகளில் பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்கு என திருப்பூரில் அரசு காப்பகம் இல்லாததால், தனியார் விடுதியில் தங்க வைக்கப்படுகின்றனர். இதனால் அசம்பாவி தம் ஏதேனும் ஏற்பட்டால் யார் பொறுப்பேற்பது? வட மாநிலம், வெளி மாவட்டங்கள் என பல்லாயிரக்கணக்கானோர் வந்து பணிபுரியும் திருப்பூர் போன்ற மாவட்டத்தில் அரசு காப்ப கம் இல்லாமல் இருக்கிறது. எனவே அரசு காப்பகம் அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும், என்றனர்.