சிறுமி பாலியல் வழக்கு - 20 ஆண்டு சிறை
உதகை, ஆக.19- சிறுமி பாலியல் வழக்கில் வாலிபருக்கு 20 ஆண்டு சிறை தண்டனை விதித்து உதகை மகிளா நீதிமன்றம் தீர்ப்பளித் தது. நீலகிரி மாவட்டம், உதகையைச் சேர்ந்த கூலி தொழி லாளி தம்பதிக்கு 17 மற்றும் 12 வயதில் இரண்டு மகள்கள் உள்ள னர். அவர்கள் இருவரும் அதே பகுதியில் உள்ள பள்ளியில் படித்து வந்தனர். இந்நிலையில், கடந்த 2021 ஆக.31 ஆம் தேதியன்று தம்பதியினர் வேலைக்கு சென்றுவிட்டு, மாலை வீட்டுக்கு வந்தனர். அப்போது வீட்டில் இருந்த 17 வயது சிறுமி மிகவும் உடல் சோர்வாக காணப்பட்டார். மருத்துவ பரி சோதனைக்கு அழைத்து சென்றபோது அவர் கர்ப்பமாக இருப்பது தெரியவந்தது. அதிர்ச்சி அடைந்த பெற்றோர் சிறுமி யிடம் விசாரித்தனர். அதில், கொரோனா காரணமாக பள்ளிகள் மூடப்பட்ட தால் அதே பகுதியைச் சேர்ந்த ஜீவானந்தம் (24) என்பவர் வீட்டில் பகல் நேரத்தில் தனியாக இருந்த சிறுமியை திருமணம் செய்து கொள்வதாக கூறி பாலியல் வன்கொடுமை செய்ததும் தெரியவந்தது. இதுகுறித்து சிறுமியின் பெற்றோர் உதகை அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். ஆய்வாளர் நித்யா தலைமையிலான போலீசார் விசாரணை நடத்தி போச்சோ சட்டத்தில் வழக்குப்பதிவு செய்து ஜீவானந் தத்தை கைது செய்தனர். இந்த வழக்கு விசாரணை உதகை மகிளா நீதிமன்றத் தில் நடந்து வந்தது. இந்த வழக்கில் செவ்வாயன்று தீர்ப்பு கூறப்பட்டது. அதில், குற்றம் சாட்டப்பட்ட ஜீவானந்ததிற்கு 20 ஆண்டுகள் சிறை தண்டனையும், 10 ஆயிரம் ரூபாய் அபராத மும் விதித்து நீதிபதி எம்.செந்தில்குமார் உத்தரவிட்டார். பாதிக்கப்பட்ட சிறுமிக்கு 2 லட்சம் ரூபாய் நிவாரணம் வழங்க உத்தரவிட்டார். இந்த வழக்கில் அரசு தரப்பில் வக்கீல் செந் தில்குமார் ஆஜராகி வாதாடினார்.
எதிர்ப்பால் திரும்பிச்சென்றது பொக்லைன்
மேட்டுப்பாளையம், ஆக.19- ரயில்வேக்கு சொந்தமான இடத்தில் இருந்த குடியிருப்பு களை இடிக்க ரயில்வே நிர்வாகம் பொக்லைன் இயந்திரத்து டன் வந்த நிலையில், மக்களின் எதிர்ப்பை அடுத்து திரும்பிச் சென்றது. கோவை மாவட்டம், மேட்டுப்பாளையத்தில் உள்ள 30 ஆவது வார்டு பாரதி நகர் பகுதி மேட்டுப்பாளையம் ரயில் நிலையத்தை ஒட்டியுள்ளது. இங்கு சுமார் 12 வீடுகள் ரயில் வேக்கு சொந்தமான இடத்தில் கட்டப்பட்டுள்ளது. வாழ்விடம் அற்ற எளிய மக்கள் வேறு வழியின்றி ரயில்வே இடத்தில் வசித்து வருகின்றனர். இந்நிலையில், ரயில் நிலைய விரி வாக்க பணிக்காக ரயில்வே நிர்வாகம் அவற்றை அப்புறப் படுத்த முடிவெடுத்தது. இங்கு குடியிருந்தவர்களின் இடங் களை காலி செய்ய நோட்டீஸ் வழங்கியுள்ளது. ரயில்வே நிர் வாகத்தின் அதிகாரத்திற்கு முன்னாள் எதிர்த்து நிற்க முடியாது என அச்சமடைந்த சிலர் காலி செய்துவிட்டனர். மீதம் உள்ள வர்கள் வேறு புகழிடம் இல்லாத நிலையில், இதுவரை காலி செய்யாமல் இருந்தனர். இந்நிலையில், காலியாக இருந்த 8 வீடுகளை பொக் லைன் இயந்திரம் மூலம் இடித்த ரயில்வே நிர்வாகம், தற் போது வசித்து வரும் குடும்பங்களை வெளியேற்ற முயற்சி மேற்கொண்டனர். ரயிவே நிர்வாகத்தின் திடீர் நடவடிக் கைக்கு எதிர்ப்பு தெரிவித்த மக்கள் போராட்டத்தில் ஈடு பட்டனர். இதனையடுத்து மேட்டுப்பாளையம் நகராட்சி நிர்வா கம் தரப்பில் பேச்சு வார்த்தை நடத்தினர். இதில், பாதிக்கப்பட்ட நான்கு குடும்பங்கள் வசிக்க மாற்று இடம் வழங்கப்படும் என் று உறுதியளித்தனர். மேலும், ஆக்கிரமிப்பு அகற்றத்தை மேலும் 15 நாட்களுக்கு ஒத்தி வைப்பதாக ரயில்வே தரப்பில் தெரிவித்து, வீடுகளை இடிக்கும் பணியை ஒத்திவைத் தனர்.
ரேபிஸ் நோய் பாதிப்பால் தொழிலாளி பலி
சேலம், ஆக.19- நாய் கடித்தற்கு தடுப்பூசி போடாததால், ரேபிஸ் நோய் பாதிப்பு ஏற்பட்டு தறி தொழிலாளி சிகிச்சை பலனின்றி உயிரி ழந்தார். சேலம் மாவட்டம், கொங்கணாபுரம் அருகே உள்ள இல வம்பலையம் பகுதியைச் சேர்ந்தவர் குப்புசாமி (43). தறி தொழிலாளியான இவர் வளர்த்து வந்த நாய், கடந்த 3 மாதங்களுக்கு முன்பு அப்பகுதியைச் சேர்ந்த நபர்களை தாக்கியுள்ளது. இதனால் தன்னுடைய நாயை கட்டி வைக்க முயன்ற போது, அவரது காலில் நாய் கடித்துள்ளது. அதற் காக எந்தவொரு தடுப்பூசியும் போடாமல் இருந்துள்ளார். இந்நிலையில், கடந்த இரண்டு நாட்களாக அவரால் தண்ணீர் குடிக்க முடியாமல் சிரமப்பட்டு வந்துள்ளார். இதைத் தொடர்ந்து அவரை அருகே உள்ள தனியார் மருத்துவ மனைக்கு அழைத்துச் சென்று பரிசோதனை மேற்கொண்ட தில், அவருக்கு ரேபிஸ் நோய் பாதிப்பு இருந்தது கண்டு பிடிக்கப்பட்டது. தொடர்ந்து, சேலம் அரசு மருத்துவ மனையில் திங்களன்று அனுமதிக்கப்பட்ட நிலையில், சிகிச்சை பலனின்றி குப்புசாமி செவ்வாயன்று உயிரிழந் தார்.