tamilnadu

img

தருமபுரியில் விரைவில் ராணுவ தளவாடங்கள் உற்பத்தி

தருமபுரியில் விரைவில் ராணுவ தளவாடங்கள் உற்பத்தி

தருமபுரி, ஜூலை 27- தருமபுரி மாவட்டத்தில் ஒன்றியப் பாது காப்பு அமைச்சகத்தின் ராணுவ தள வாடங்கள் உற்பத்தி ஆலை விரைவில் தொடங்கப்படவுள்ளது என மாவட்ட ஆட்சி யர் ரெ.சதீஷ் தெரிவித்துள்ளார். தருமபுரி அரசு கலைக்கல்லூரி கலை யரங்கில் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் சனியன்று நடைபெற்றது. மாவட்ட நிர் வாகம், வேலைவாய்ப்பு மற்றும் தொழில் நெறி வழிகாட்டும் மையம் இணைந்து நடத்திய இம்முகாமுக்கு மாவட்ட ஆட்சியர்  ரெ.சதீஷ் தலைமை வகித்து, பணியாணை களை வழங்கினார். அப்போது அவர் பேசுகை யில், தருமபுரியில் சிப்காட் அமைக்க  முதற்கட்டமாக நிலங்கள் கையகப்படுத்தப் பட்டு ஏற்கெனவே ஒப்படைக்கப்பட்டுள்ளன. தற்போது இரண்டாம் கட்டமாக 650 ஏக்கர்  நிலம் கையகப்படுத்தப்பட்டு ஒப்படைக் கப்பட்டுள்ளது. இங்கு உற்பத்தியை தொடங்க 201 நிறுவனங்கள் விண்ணப் பித்துள்ளன. இதன்மூலம் தருமபுரியில் வேலைவாய்ப்பு மற்றும் அடிப்படை தொழில் வசதிகள் மேம்படுத்தப்படும். தருமபுரி மாவட் டம், நெக்குந்தி கிராமத்தில் பாதுகாப்பு அமைச்சகத்தின் கீழ் இயங்கும் நிறுவனம் பாதுகாப்பு தளவாட உற்பத்திக்கான ஆலையை சில மாதங்களில் தொடங்கிட ஒப் பந்தம் போடப்பட்டுள்ளது. இதுபோன்ற நிறு வனங்களில் வேலைவாய்ப்புகளை பெற இளையோர் தங்களது திறமைகளை வளர்த் துக்கொள்ள வேண்டும், என்றார்.

சிஐடியு மாநில மாநாடிற்கு இரண்டாவது தவணையாக கோவை டிஸ்ட்ரிக்ட் ஜெனரல் இன் ஜினியரிங் அண்ட் மெக்கானிக்கல் ஒர்க்கர்ஸ் யூனியன் சார்பில் ரூ.ஒன்றரை லட்சம் வழங் கப்பட்டது. கோவை, கணபதியிலுள்ள இன்ஜினியரிங் சங்க அலுவலகத்தில் ஞாயிறன்று நடை பெற்ற நிகழ்வில், மாநாட்டு வரவேற்புக்குழு கௌரவத் தலைவரும், முன்னாள் எம்எல்ஏ-வுமான  யு.கே.வெள்ளிங்கிரி, சிஐடியு மாவட்டச் செயலாளர் எஸ்.கிருஷ்ணமூர்த்தி, தலைவர் கே.மனோக ரன், பொருளாளர் ஆர்.வேலுசாமி, இன்ஜினியரிங் சங்க பொதுச்செயலாளர் சி.துரைசாமி, செயலா ளர் வி.பெருமாள், தலைவர் எஸ்.பி.சுப்பிரமணியம், பொருளாளர் ஏ.ஜி.சப்பிரணியம், துணைத் தலை வர் ரமேஷ் உட்பட பலர் கலந்து கொண்டனர். தீக்கதிர் நாளிதழுக்கான 8 ஆண்டு சந்தாக்களும் ஒக் படைக்கப்பட்டது.