tamilnadu

img

சாதி மறுப்பு திருமணம் செய்தவர்களுக்கு பாதுகாப்பு அளிக்க மாதர் சங்க ஈரோடு மாநாடு வலியுறுத்தல்

சாதி மறுப்பு திருமணம் செய்தவர்களுக்கு பாதுகாப்பு அளிக்க மாதர் சங்க ஈரோடு மாநாடு வலியுறுத்தல்

ஈரோடு, செப்.7- சாதி மறுப்பு திருமணம் செய்து கொண்டவர்களுக்கு பாதுகாப்பு அளிக்க வேண்டுமென அனைத்திந் திய ஜனநாயக மாதர் சங்கம் ஈரோடு  மாவட்ட மாநாடு வலியுறுத்தியுள் ளது. அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்க ஈரோடு மாவட்ட 14  ஆவது மாநாடு சித்தோடு, செல்லம்  மகாலில், கொங்குநதி நினைவரங் கில் ஞாயிறன்று நடைபெற்றது. மாவட்டத் தலைவர் பி.எஸ். பிரசன்னா தலைமை வகித்தார். மாவட்ட துணைத் தலைவர் ஆர். கோமதி கொடியேற்றினார். தாலுகா செயலாளர் எஸ்.தன லட்சுமி வரவேற்றார். மாவட்டக் குழு உறுப்பினர் பி.விஜயலட்சுமி அஞ்சலி தீர்மானம் வாசித்தார். மாநில செயற்குழு உறுப்பினர் எஸ்.பவித்ரா தேவி துவக்கவுரை யாற்றினார். மாவட்டச் செயலாளர் பா.லலிதா வேலை அறிக்கை சமர்ப்பித்தார். பொருளாளர் எஸ்.கீதா வரவு செலவு வாசித்தார். மாநில உதவிச் செயலாளர் எம்.கிரிஜா நிறைவுரையாற்றினார்.  இதில், நுண் நிதி நிறுவனங்க ளில் கடன் பெற்ற பெண்களிடம் அராஜகமாக வசூலிப்பதை கைவிட வேண்டும். கிராமப்புற வேலை உறுதி திட்டத்தை பேரூ ராட்சி, நகராட்சி பகுதிகளுக்கும் விரிவுபடுத்த வேண்டும். அரசுப் பள்ளி, அலுவலகங்கள் மற்றும் பணிபுரியும் இடங்களில் பாலியல் புகார் கமிட்டிகள் அமைக்க வேண் டும். சாதி மறுப்பு திருமணம் செய்து  கொண்டவர்களுக்கு பாதுகாப்பு வழங்க வேண்டும். ஆணவக் கொலைகளை தடுக்க தனி சட்டம்  இயற்ற வேண்டும் உள்ளிட்ட தீர் மானங்கள் நிறைவேற்றப்பட்டன. இம்மாநாட்டில், மாதர் சங்க ஈரோடு மாவட்டத் தலைவராக எஸ். கீதா, மாவட்டச் செயலாளராக ஜெ. அருந்ததி, மாவட்டப் பொருளாள ராக எஸ்.மல்லிகா, துணைத் தலை வராக பா.லலிதா, இணைச் செயலா ளராக என்.கலாமணி உள்ளிட்ட 15  பேர் கொண்ட மாவட்டக் குழு தேர்வு  செய்யப்பட்டது.