tamilnadu

img

தியாகி சுப்பிரமணிய சிவா பிறந்தநாள் கொண்டாட்டம்

தியாகி சுப்பிரமணிய சிவா பிறந்தநாள் கொண்டாட்டம்

தருமபுரி, அக்.4- விடுதலைப் போராட்ட வீரர் தியாகி சுப்பிரமணிய சிவா-வின் 142 ஆவது பிறந்தநாள் சனியன்று கொண்டாடப் பட்டது. தருமபுரி மாவட்டம், பென்னாகரம் வட்டம், பாப்பாரப்பட்டி, ஒண்ணப்ப கவுண்டன அள்ளி ஊராட்சியிலுள்ள தியாகி சுப்பிரமணிய சிவா மணிமண்ட பத்தில், அவரின் 142 ஆவது பிறந்த நாள் சனியன்று கொண்டாடப்பட்டது.  வண்ண மலர்களால் அலங்கரிக்கப் பட்டு வைக்கப்பட்டிருந்த அவரின் திருவுருவப்படம் மற்றும் நினைவிடத் தில் மாவட்ட ஆட்சியர் ரெ.சதீஸ் மற்றும் தருமபுரி நாடாளுமன்ற உறுப்பினர் ஆ.மணி ஆகியோர் மலர்தூவி மரி யாதை செலுத்தினர். இதைத்தொ டர்ந்து, பென்னாகரம் சட்டமன்ற உறுப் பினர் ஜி.கே.மணி, முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் தடங்கம் பெ.சுப்பிரமணி, உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதி கள், அரசு அலுவலர்கள் மரியாதை செலுத்தினர். தொடர்ந்து, தியாகி சுப்பிர மணிய சிவா-வை போற்றும் விதமாக நடைபெற்ற போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளுக்கு பரிசு கள் வழங்கப்பட்டன. இந்நிகழ்ச்சியில் செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் வெ.லோகநாதன், பென்னாகரம் வட் டாட்சியர் சண்முகசுந்தரம், பாப்பாரப் பட்டி பேரூராட்சித் தலைவர் பிருந்தா உட்பட பலர் கலந்து கொண்டனர். தொடர்ந்து, தியாகி சுப்பிரமணிய சிவா பேரவை சார்பில் நடைபெற்ற விழாவுக்கு, அதன் அமைப்பாளர் வே. விஸ்வநாதன் தலைமை வகித்தார். காங்கிரஸ் நகரத் தலைவர் டி.தங்க ராஜ் முன்னிலை வகித்தார். மாநில  பொதுக்குழு உறுப்பினர் ஜி.கிருஷ் ணன், காங்கிரஸ் நிர்வாகிகள் வேடியப் பன், மணி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வட்டாரச் செயலாளர் ஆர்.சக்தி வேல், சிஐடியு மாவட்ட துணைச்செய லாளர் அ.முருகேசன் உள்ளிட்டோர் மரி யாதை செலுத்தினர். நாமக்கல் இதேபோன்று, நாமக்கல் மாவட் டம் குமாரபாளையம் ஜெகேகே நட ராஜா பகுதியில் சுதந்திர போராட்ட  தியாகி சுப்பிரமணிய சிவா மற்றும் திருப்பூர் குமரன் பிறந்தநாள் விழா  விடியல் ஆரம்பம் பவுண்டேசன் சார் பில், சனியன்று கொண்டாடப்பட்டது. இதில், தியாகி சுப்பிரமணிய சிவா மற் றும் திருப்பூர் குமரன் ஆகியோரின் வாழ்க்கை வரலாறு குறித்து மாணவர்க ளுக்கு விளக்கப்பட்டது. மேலும் மாணவ, மாணவிகளுக்கு 64 ஆவது வாசிப்பு மையம் தொடங்கப்பட்டது. இந்த மையம் ஜமுனா, கோமதி ஆகி யோர் மேற்பார்வையில் நடைபெறும் என நிர்வாகிகள் தெரிவித்தனர். முடி வில், தீனா நன்றி கூறினார்.