சிறுமிக்கு பாலியல் தொல்லை இளைஞருக்கு 12 ஆண்டு சிறை
கோவை, ஜூலை 25– சிறுமிக்கு பாலியல் தொல்லை அளித்த வழக்கில் கைது செய்யப்பட்ட, இளைஞருக்கு 12 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து போக்சோ நீதிமன்ற நீதிபதி உத்தரவிட்டுள்ளார். கோவை உக்கடம் அல் அமீன் காலனியை சேர்ந்தவர் ரிஸ்வான் (31). இவர் கடந்த 2021 ஆம் ஆண்டு 16 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்துள்ளார். இது தொடர்பாக ஆர்.எஸ் புரம் அனைத்து மகளிர் போலீசார் ரிஸ் வான் மீது போக்சோ சட்டத்தில் வழக்கு பதிவு செய்து கைது செய்தனர். அதனைத் தொடர்ந்து ரிஸ்வான் பிணையில் வெளியே வந்தார். இவ்வழக்கின் இறுதி கட்ட விசாரணை கடந்த 2 வாரத்திற்கு முன் போக்சோ நீதிமன்றத்தில் நடை பெற்றது. அப்போது விசாரணைக்கு ஆஜரான ரிஸ்வான் தனக்கு தண்டனை கொடுக்கக் கூடாது, தன்னை கைது செய்யக்கூடாது எனக் கூறி தான் மறைத்து வைத்திருந்த பிளேடால் கழுத்தை அறுத்துக் கொள்வேன் என மிரட்டி னார். சுமார் 4 மணி நேரம் தகராறில் ஈடுபட்டார். இதைய டுத்து போலீசார் அவரின் உயிர் பாதுகாப்பு கருதி விடு வித்த நிலையில், 3 நாட்கள் கழித்து அவரை மூன்று மணி நேரம் கண்காணித்து தனிப்படை போலீசார் மடக்கி பிடித்து கைது செய்தனர். இந்த வழக்கின் தீர்ப்பு வெள்ளியன்று வெளியானது. அதில் ரிஸ்வான் குற்றவாளி என்றும், போக்சோ வழக்கில் 7 ஆண்டுகள், கொலை மிரட்டல் வழக்கில் 5 ஆண்டுகள் என 12 ஆண்டுகள் சிறை தண்டனை மற்றும் ரூ.7 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது.
திருமணமான 4 மாதத்தில் பெண் தற்கொலை
உதகை, ஜூலை 25- உதகையில் திருமணமான 4 மாதத்தில் பெண் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து போலீசார் மற்றும் கோட்டாட்சியர் விசாரணை மேற்கொண்டு வரு கின்றனர். நேபாள நாட்டைச் சேர்ந்தவர் ராஜேந்திரன். இவருக்கு ஏற்கனவே திருமணமாகி 3 குழந்தைகள் உள்ளன. இதனி டையே, ராஜேந்திரன் குடும்பத்துடன் கடந்த சில வருடங் களுக்கு முன்பு வேலை காரணமாக நீலகிரி மாவட்டம், உத கைக்கு வந்துள்ளார். கருத்து வேறுபாடால் இருவரும் 3 வரு டங்களுக்கு முன்னர் பிரிந்துவிட்டனர். இந்நிலையில், நேபாள நாட்டைச் சேர்ந்த நிர்மலா (22) என்பவரை ராஜேந்திரன் கடந்த 4 மாதத்திற்கு முன்பு இரண்டாவதாக திருமணம் செய்து கொண்டார். இதன்பின் அவர்கள் இருவரும் இணைந்து உத கையில் ‘பாஸ்ட் புட்’ கடை நடத்தி வந்தனர். இந்நிலையில், அவர்கள் வசித்து வந்த வீட்டில் வியாழனன்று நிர்மலா தூக் கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்த தகவலின் பேரில் உதகை மத்திய காவல் துறையினர் சம்பவ இடத் திற்கு சென்று உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக உதகை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து, சந்தேக மரணம் என்று வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற் கொண்டு வருகின்றனர். மேலும், கோட்டாட்சியர் விசாரணை யும் நடைபெற்று வருகிறது.
பேரூர் கோவிலில் செல்போனுக்கு தடை
கோவை, ஜூலை 25- பேரூர் பட்டீஸ்வரர் கோவிலுக்குள் பக் தர்கள் செல்போன் எடுத்துச் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. கோவை மாவட்டம், பேரூர் பட்டீஸ்வரர் கோவிலுக்கு பல்வேறு பகுதிகளிலிருந்து தினமும் ஆயிரக்கணக்கானோர் வந்து செல்கின்றனர். கடந்த ஞாயிறன்று கோவில் நடை மூடிய பின்னர் போலீஸ் அதிகாரி ஒரு வர் உள்ளே சென்று சாமி தரிசனம் செய்த தாக வீடியோ வெளியாகி சர்ச்சையை ஏற்ப டுத்தியது. இதையடுத்து கோவில் ஊழி யர்கள் வேல்முருகன், சாமிநாதன் ஆகிய இருவர் தற்காலிக பணியிடை நீக்கம் செய்யப் பட்டனர். இந்நிலையில் வியாழனன்று முதல் சாமி தரிசனம் செய்ய செல்லும் பக்தர்கள் செல்போன் எடுத்துச் செல்ல தடை விதிக் கப்படுவதாக கோவில் நிர்வாகம் அறிவித் துள்ளது. இதனால் கோவிலுக்கு வரும் பக்தர்கள் நுழைவு வாயில் அலுவலகம் அருகே உள்ள அறையில் தங்களது செல் போன்களை கொடுத்து அதற்கான டோக் கன்களை பெற்று செல்லலாம். சாமி தரிச னம் செய்து விட்டு மீண்டும் டோக்கனை கொடுத்து செல்போன்களை வாங்கி செல்ல ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில் வியாழனன்று ஆடி அமா வாசை என்பதால் இக்கோவிலுக்கு ஆயிரக் கணக்கான பக்தர்கள் காலையிலிருந்து வர துவங்கினர். பக்தர்கள் ஏராளமானோர் வந்ததால் செல்போனை கொடுத்துச் செல்லவும், கொடுத்தவர்கள் திரும்பி வாங் கிச் செல்லவும் நீண்ட வரிசையில் காத்தி ருக்க வேண்டிய சூழல் ஏற்பட்டது. இதனால் பக்தர்கள் அவதி அடைந்தனர். தரிசனத்திற் காக காத்திருக்கும் நேரத்தை விட செல் போனை வாங்கிச் செல்ல காத்திருக்கும் நேரம் அதிகமாக உள்ளது. முழுமையான ஏற்பாடுகளை செய்த பின்னரே இம்மாதி ரியான புதிய நடைமுறைகளை அமல்ப டுத்த வேண்டும் பக்தர்கள் கோரிக்கை விடுத் துள்ளனர்.
மணல் கடத்தல்: 4 பேர் கைது
சேலம், ஜூலை 25- சேலம் மாவட்டம், கெங்க வல்லி அருகே உள்ள சாத்தப் பாடி ஏரியிலிருந்து நான்கு டிராக்டர்களில் மணல் கடத் தப்படுவதாக போலீசா ருக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில் செவ்வாயன்று இரவு அங்கு சென்ற போலீ சார் மணல் கடத்தலில் ஈடு பட்டிருந்த அதை பகுதியைச் சேர்ந்த சிவக்குமாா் (50), பெரியசாமி (54), கந்தசாமி (49), பழனிமுத்து (58) ஆகிய நான்கு பேரை கைது செய்தனர்.