tamilnadu

img

டாஸ்மாக் ஊழியர்களை பணி நிரந்தரம் செய்திடுக

டாஸ்மாக் ஊழியர்களை பணி நிரந்தரம் செய்திடுக

உதகை, ஆக.20- 22 ஆண்டுகளாக பணிபுரிந்து வரும் டாஸ்மாக் ஊழியர்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும் என டாஸ்மாக் ஊழியர் சங்க பேரவைக் கூட்டத்தில் தீர்மானம் நிறை வேற்றப்பட்டது. நீலகிரி மாவட்ட டாஸ்மாக் ஊழியர் சங்க  பேரவை கூட்டம், குன்னூரில் புதனன்று,  தலைவர் ஜெ.ஆல்துரை தலைமையில்  நடைபெற்றது. சிஐடியு மாவட்டச் செயலாளர்  சி.வினோத் துவக்கவுரையாற்றினார். டாஸ் மாக் ஊழியர் சங்க மாவட்டச் செயலாளர் பி. மகேஷ், பொருளாளர் தியாகராஜன் ஆகி யோர் அறிக்கைகளை முன்வைத்தனர். இக் கூட்டத்தில், காலி மதுபாட்டில் திரும்ப பெரும் திட்டத்திற்கு ஊழியர்களை திணிப் பதை கைவிட வேண்டும். நீலகிரி மாவட்டத் தில் வனவிலங்குகள் தாக்குதல் அதிகரித் துள்ளதால், இரவு பணி நேரத்தை குறைக்க  வேண்டும். 22 ஆண்டுகளாக பணிபுரிந்து வரும் டாஸ்மாக் ஊழியர்களை பணி நிரந் தரம் செய்ய வேண்டும். ஊழியர்களுக்கு சாத கமான நீதிமன்ற தீர்ப்பினை மேல்முறையீடு செய்யாமல் நடைமுறைப்படுத்த வேண்டும்,  உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட் டன. இதைத்தொடர்ந்து, சங்கத்தின் மாவட் டத் தலைவராக ஜே.ஆல்.துரை, செயலாள ராக பி.மகேஷ், பொருளாளராக ஏ.நவீன்சந்தி ரன் உட்பட 15 பேர் கொண்ட மாவட்டக்குழு தேர்வு செய்யப்பட்டது. டாஸ்மாக் ஊழியர்  சம்மேளன பொதுச்செயலாளர் கே.திருச் செல்வன் நிறைவுரையாற்றினார். முடிவில், தேவசேனாதிபதி நன்றி கூறினார்.