சுங்கச்சாவடியில் கட்டணம் வசூல்: உள்ளூர் மக்கள் போராட்டம்
கோவை, செப்.7- மதுக்கரை சுங்கச்சாவடியில் கட்டண ரத்து கோரி உள்ளூர் மக்கள் போராட்டத் தில் ஈடுபட்டனர். கோவை, நீலாம்பூர் முதல் வாளையார் வரையிலான பாலக்காடு புறவழிச் சாலை யில் உள்ள 6 சுங்கச்சாவடிகளில், மதுக்கரை சுங்கச்சாவடியைத் தவிர மற்ற 5 சாவடிக ளில் கட்டணம் வசூலிப்பது ரத்து செய்யப் பட்டுள்ளது. ஆனால், மதுக்கரை சுங்கச் சாவடியில் மட்டும் உள்ளூர் வாகன உரிமை யாளர்களிடம் கட்டணம் வசூலிக்கப்படுவ தால், அவர்கள் கடும் அதிருப்தி அடைந்த னர். இதனையடுத்து, கட்டணம் ரத்து செய் யப்பட வேண்டும் அல்லது சலுகை அளிக்க வேண்டும் என்று ஞாயிறன்று மதுக்கரை சுங்கச்சாவடியின் முன்பு உள்ளூர் மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். உள்ளூர் மக்களின் போராட்டம் குறித்து தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த மதுக்கரை காவல்துறையினர், போராட்டத் தில் ஈடுபட்டவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர். அவர்களின் கோரிக்கைகளை எழுத்து மூலம் சம்பந்தப்பட்ட அதிகாரிக ளுக்கு மனுவாக அளித்து, தீர்வு காணு மாறு அறிவுறுத்தினர். இதையடுத்து, உள் ளூர் மக்கள் கலைந்து சென்றனர்.