698 மகளிர் சுய உதவிக்குழுக்களுக்கு ரூ.74.44 கோடி கடன் உதவி
திருப்பூர், செப்.16- திருப்பூரில் 698 மகளிர் சுய உதவிக்குழுக்களுக்கு ரூ.74.44 கோடி மதிப்பீட்டில் கடனுதவிக்கான காசோலை கள் மற்றும் 896 சுய உதவிக் குழு உறுப்பினர்களுக்கு அடையாள அட்டைகளை செவ்வாயன்று அமைச்சர் கள் வழங்கினர். திருப்பூர் மாநகராட்சி, தனியார் மண்டபத்தில் 698 மகளிர் சுய உதவிக் குழுக்களுக்கு ரூ.74.44 கோடி மதிப்பீட்டில் கடனுதவிக்கான காசோலைகள் மற்றும் 896 சுய உதவிக்குழு உறுப்பினர்களுக்கு அடையாள அட்டைகளை தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித்துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன் மற்றும் மனித வள மேலாண்மைத்துறை அமைச்சர் என்.கயல் விழி செல்வராஜ் ஆகியோர் செவ்வா யன்று வழங்கினர். இந்த அட்டைகளின் மூலம் தாங்கள் உற்பத்தி செய்யும் உற்பத்திப் பொருட்களை சந்தைபடுத்திட ஏதுவாக அரசு பேருந்துக ளில் 25 கிலோ வரை கட்டணம் ஏதுமின்றி பொருட்களை எடுத்து செல்லலாம். இ-சேவை மையங்களில் வழங்கப்படும் சேவைகளில் 10% தள்ளுபடி வழங் கப்படும். அரசு அனுமதி பெற்ற மருத்துவம னைகளில் முதலமைச்சரின் மருத்துவ காப்பீடு திட்டத்தின் கீழ் மருத்துவ சிகிச்சை மேற்கொள்ள இந்த அடையாள அட்டையை பயன்படுத்திக் கொள்ளலாம். மேலும் தமிழ் நாடு அரசின் கூட்டுறவு துறை மூலம் வழங் கப்படும், பல்வேறு கடன் திட்டங்களில் மகளிர் சுய உதவிக்குழு உறுப்பினர்களுக்கு முன்னு ரிமை அடிப்படையில் கடன் இணைப்பு வழங் கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.