எல்ஐசி முகவர்கள் ஆர்ப்பாட்டம்
கோவை, ஆக.20- 70 வயதுக்கு மேற்பட்ட முகவர்களுக்கும் குழு காப் பீட்டுப் பலன்களை வழங்க வேண்டும் என வலியுறுத்தி அகில இந்திய எல்ஐசி முகவர்கள் சங்கத்தினர் ஆர்ப்பாட் டத்தில் ஈடுபட்டனர். அனைத்து முகவர்களுக்கும் மெடிக்கிளைம் வச தியை உடனடியாக விரிவுபடுத்த வேண்டும். 70 வய துக்கு மேற்பட்ட முகவர்களுக்கும் குழுக் காப்பீட்டுப் பலன்களை உடனே வழங்க வேண்டும். பாலிசிகள் மீதான சேவை வரியை (ஜிஎஸ்டி) நீக்க வேண்டும். அன் னிய நேரடி முதலீட்டை (எப்டிஐ) முழுமையாக திரும்பப் பெற வேண்டும், உள்ளிட்ட கோரிக்கைகளை வலியு றுத்தி புதனன்று கோவை - அவிநாசி சாலையிலுள்ள எல்ஐசி பீளமேடு கிளை அலுவலகம் முன்பு அகில இந்திய எல்ஐசி முகவர்கள் சங்கத்தினர் (லிகாய்) ஆர்ப் பாட்டத்தில் ஈடுபட்டனர். சங்கத்தின் கோவை கோட்ட துணைச்செயலாளர் ஆர்.பாலசுப்ரமணியம் தலைமை வகித்தார். மாவட்டச் செயலாளர் ச.கோவர்தன், கிளைச் செயலாளர்கள் எஸ்.ஆர்.மயில்சாமி, ராமச்சந்திரன் உட் பட பலர் கலந்து கொண்டனர்.