மதவாதத்தை தகர்த்து சமுத்துவ இந்தியாவை படைப்போம்! திருப்பூரில் நடந்த காந்தி ஜெயந்தி நிகழ்ச்சிகளில் உறுதியேற்பு
திருப்பூர், அக்.2- தேசத்தந்தை மகாத்மா காந்தியின் 157 ஆவது பிறந்த தினத்தை முன்னிட்டு திருப்பூரில் தமிழக மக்கள் ஒற்றுமை மேடை, தமிழ்நாடு முற்போக்கு எழுத்தா ளர் மற்றும் கலைஞர்கள் சங்கம், பாலர் பூங்கா உள்ளிட்ட அமைப்புகள் வியாழ னன்று பல்வேறு இடங்களில் சாதி, மத, இன வேறுபாடுகளைக் கடந்து, ஒற்று மையுடன் வாழ்வோம் என உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சிகள் நடத்தின. மக்கள் ஒற்றுமை மேடை தமிழக மக்கள் ஒற்றுமை மேடை சார்பில் காந்தி நகர் சர்வோதயா சங்க வளாகத்தில் காந்தி அஸ்தி நினைவி டத்தில் காந்தி சிலைக்கு மாலை அணி வித்து உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சி நடை பெற்றது. இதில் மக்கள் ஒற்றுமை மேடை சார்பில் மார்க்சிஸ்ட் கட்சியின் மாநிலக்குழு உறுப்பினர் கே.காமராஜ், காங்கிரஸ் மாநகர் மாவட்டத் தலைவர் ஆர்.ஈஸ்வரன் உள்பட பலர் பங்கேற்ற னர். தமுஎகச மாவட்டத்தலைவர் பி. ஆர்.கணேசன் உறுதிமொழி வாசிக்க அனைவரும் மதநல்லிணக்க, மக்கள் ஒற்றுமை உறுதி ஏற்றனர். பாலர் பூங்கா: காந்திநகர் சர்வோதயா சங்க வளா கத்தில் நடைபெற்ற பாலர் பூங்கா நிகழ்ச் சியில், வடக்கு நகர பாலர் பூங்கா தலை வர் ரகுநாதன் தலைமையேற்றார். இதில், குழந்தைகள் தேசிய ஒருமைப் பாட்டு உறுதிமொழி ஏற்றனர். தமுஎகச மாவட்டத் தலைவர் பி.ஆர். கணேசன் சிறப்புரையாற்றினார். ஒருங்கிணைப் பாளர் தனுஷ் மற்றும் செயலாளர் ஹரி ஹரன் ஒருங்கிணைத்தனர். இந்நிகழ் வில் சுமார் 40 குழந்தைகள் பங்கேற்ற னர். அவிநாசி பகுதியில் நகராட்சி அலுவ லகம் முன்பும், வடுகபாளையம் பகுதி யில் ஒருங்கிணைப்பாளர்கள் நந்தினி, மணிகண்டன் ஆகியோர் தலைமையில் உறுதிமொழி ஏற்கப்பட்டது. இதில், 30 குழந்தைகள் கலந்து கொண்டனர். திருப்பூர் தெற்கு நகரம் மாநகராட்சி முன் காந்தி சிலை அருகில் தெற்கு நகர பாலர் பூங்கா தலைவர் ஞானசேகர் தலைமையில் நடைபெற்ற நிகழ்ச்சி யில், 20 குழந்தைகள் பங்கேற்றனர். மாவட்ட பொருளாளர் மேகா ஒருங்கி ணைத்தார். திருப்பூர் வடக்கு ஒன்றியம் பெருமா நல்லூரில் பாலர் பூங்கா சார்பில் “பாலர்களின் ஒற்றுமை விழா” நடை பெற்றது. இதில் 200 மாணவர்கள் பங் கேற்றனர். மகாத்மா காந்தி முகப் பொம் மைகள் அணிந்து பெருமாநல்லூர் முதல் செல்வம் மஹால் வரை குழந் தைகள் பேரணியாக அணிவகுத்து வந்த னர். மாவட்டத் தலைவர் ராமமூர்த்தி தலைமையில் ரேவந்த் ஒருங்கிணைத் தார். அரசு பள்ளி தலைமை ஆசிரியர் ஜெயலட்சுமி சிறப்புரையாற்றினார். நிகழ்ச்சியின் கையெழுத்துப் போட்டி யில் பங்கேற்ற குழந்தைகளுக்கு சான்றி தழ்கள் வழங்கப்பட்டன. தமிழ்நாடு சிறுபான்மை மக்கள் நலக்குழு சார்பில் காந்தி ஜெயந்தியை முன்னிட்டு திருப்பூர் மாநகராட்சி அலு வலகம் அருகே காந்தி சிலைக்கு மாலை அணிவித்து மறியாதை செலுத்தப்பட் டது. இதைதொடர்ந்து மத நல்லிணக் கம் மற்றும் மக்கள் ஒற்றுமையை வலி யுறுத்தி உறுதிமொழி ஏற்கப்பட்டது. இந்நிகழ்ச்சிக்கு அமைப்பின் மாவட்டத் தலைவர் ஜாபர் அகமது தலைமை வகித் தார். மாவட்டச் செயலாளர் வை.ஆனந் தன், ததீஒமு தலைவர் ஞானசேகர் உள் ளிட்ட பலர் பங்கேற்றனர். தமிழ்நாடு முற்போக்கு எழுத்தா ளர்கள் கலைஞர்கள் சங்கத்தின் சார்பில் திருப்பூர், காந்திநகர், உடுமலை உள்ளிட்ட பகுதிகளில் சமூக ஒற்றுமை மற்றும் மத நல்லிணக்கத்தை வலியு றுத்தி உறுதிமொழி ஏற்கப்பட்டது. இதில், மாநில செயற்குழு உறுப்பினர் ஆர்.ஈஸ்வரன், மாவட்டத் தலைவர் பி. ஆர்.கணேசன், மாவட்டச் செயலா ளர் குமார் உட்பட மாவட்ட நிர்வா கிகள், கிளை நிர்வாகிகள் என பலர் பங்கேற்றனர். அதேபோல், ஊத்துக் குளி ஈஸ்வரன் கோவில் மைதானத்தில் காந்தி ஜெயந்தியை முன்னிட்டு உறுதி மொழி ஏற்பு நிகழ்ச்சி நடைபெற்றது. இந்நிகழ்விற்கு கிளை கன்வீனர் கை. குழந்தைசாமி தலைமை வகித்தார். ஊத்துக்குளி பேரூராட்சி முன்னாள் தலைவர் ஆர்.குமார், பிஎஸ்என்எல் ஓய்வு பெற்றோர் சங்க நிர்வாகி பா. சின்னசாமி, அறிவைத் தேடி அறக்கட் டளை நிறுவனர் ஜிலானி ஆகியோர் பேசினர். இந்நிகழ்வில் ஊத்துக்குளி பேரூ ராட்சி 7ஆவது வார்டு கவுன்சிலர் சரஸ்வதி, தொழிற்சங்க நிர்வாகிகள் பெரியசாமி, சக்திவேல், மார்க்ஸ், வாலிபர் சங்க செயலாளர் விக்னேஷ் , மாதர் சங்கம் லட்சுமி உட்பட பலர் கலந்து கொண்டனர். திருமுருகன்பூண்டி நகராட்சி முன்பு நிறுவப்பட்டுள்ள காந்தி சிலைக்கு தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கத்தின் திருமுரு கன்பூண்டி கிளை சார்பில் காந்தி சிலைக்கு மாலை அணிவித்து, உறுதி மொழி ஏற்றனர். இதில் சங்கத்தின் செய லாளர் காமராஜ், தலைவர் ஈஸ்வரன், நகர்மன்ற உறுப்பினர் சுப்பிரமணியம், நிர்வாகிகள் அருணாச்சலம், பாலசுப் பிரமணியம், பேச்சிமுத்து, பாண்டி யன், அருள்ஜோதி, விவசாய சங்க மாவட்ட துணைச் செயலாளர் வெங்க டாசலம் உள்ளிட்ட பலர் கலந்து கொண் டனர்.
