tamilnadu

கோயம்புத்தூர் விரைவு செய்திகள்

தூய்மைப் பணியாளர்களை மலக்குழியில் இறக்கினால் சட்ட ரீதியான நடவடிக்கை

சேலம், ஆக.26- சேலம் மாவட்டத்தில் தூய்மைப் பணியா ளர்களை மலக்குழிகளில் இறக்கி வேலை  செய்ய ஈடுபடுத்தினால், சம்பந்தப்பட்ட வர்கள் மீது சட்ட ரீதியான நடவடிக்கை மேற் கொள்ளப்படும் என மாவட்ட ஆட்சியர் ரா. பிருந்தாதேவி எச்சரிக்கை விடுத்தார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், தூய்மைப் பணியாளர் களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் வகையில், பல்வேறு நலத்திட்ட உதவிகள்  அரசின் சார்பில் வழங்கப்பட்டு வருகின்றன.  அதேபோன்று, தூய்மைப் பணியாளர்களின்  உடல்நலம் காத்திடும் வகையில், தொடர்ச்சி யாக மருத்துவ முகாம்களும் நடத்தப்பட்டு வருகின்றன. குறிப்பாக, தூய்மைப் பணி யாளர்களின் பாதுகாப்பை உறுதிசெய்திடும் வகையில், முகக்கவசம், கையுறைகள், பாது காப்பு உடைகள், காலணிகள் உள்ளிட்ட பாதுகாப்பு உபகரணங்கள் வழங்கப்பட்டுள் ளன. சேலம் மாவட்டத்தில் தூய்மைப் பணியா ளர் எவரும் மலக்குழிகளில் இறங்கி வேலை  செய்யக்கூடாது என தொடர்ச்சியாக அறி வுறுத்தப்பட்டு வருகிறது. இதுபோன்ற பணி களில் தூய்மைப் பணியாளர்களை ஈடுபடுத்தி னால், சம்பந்தப்பட்டவர்கள் மீது சட்ட ரீதி யான நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

2 டன் வெடிப்பொருட்கள் பறிமுதல்

கோவை, ஆக.26- முறையான ஆவணங்களின்றி கொண்டு செல்லப்பட்ட 15 ஆயிரம் ஜெலட்டின் குச்சி கள் உட்பட 2 டன் வெடிபொருட்களை  போலீ சார் பறிமுதல் செய்தனர். சேலம் -  கொச்சின் தேசிய நெடுஞ்சாலை வழியாக வெடிப்பொருட்கள் கடத்தப்படு வதாக தீவிரவாத தடுப்புப்பிரிவு போலீசா ருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து ஆய்வாளர் கருப்பசாமி பாண்டியன் தலை மையிலான  தீவிரவாத தடுப்பு பிரிவு போலீ சார் செவ்வாயன்று அதிகாலை மதுக்கரை மரப்பாலம் அருகே கண்காணிப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அந்த வழியாக வந்த பொலீரோ வாகனத்தை நிறுத்தி போலீ சார் சோதனையிட்டனர். அதில் அதிக வீரிய தன்மை கொண்ட 15 ஆயிரம் ஜெலட்டின் குச்சிகள் உட்பட 2 டன் வெடிப்பொருட்கள் இருந்தது தெரியவந்தது. வாகனத்தை ஓட்டி வந்த கேரளம் மாநிலம், மலப்புரத்தை சேர்ந்த சுபையர் (45), சேலத்தில் இருந்து உரிய ஆவணங்களின்றி வெடிபொருட்களை  எடுத்துச் சென்றது தெரியவந்தது. இதைய டுத்து வெடிப்பொருட்களை பறிமுதல் செய்த தீவிரவாத தடுப்புப்பிரிவு போலீசார் அதனை மதுக்கரை போலீசில் ஒப்படைத்தனர். மேலும், சுபையரிடம் தொடர்ந்து விசாரணை  மேற்கொண்டு வருகின்றனர்.