அமெரிக்காவின் வர்த்தகப்போரைக் கண்டித்து இடதுசாரிகள் ஆர்ப்பாட்டம்
நாமக்கல், ஆக.29- இந்தியா மீதான அமெரிக்காவின் வரி விதிப்பைக் கண்டித்து, நாமக்கல் பூங்கா சாலையில் ஆர்ப்பாட்டம் நடைபெறவுள்ளதென, இடதுசாரி கட்சிகள் அறிவித்துள்ளன. நாமக்கல் மாவட்டம், திருச்செங் கோடு, 40 கால் மண்டபம் அருகே உள்ள இந்திய கம்யூனிஸ்ட் கட்சி யின் மாவட்டக்குழு அலுவலகத்தில், இடதுசாரிகள் கூட்டுக்குழு கூட்டம் வியாழனன்று நடைபெற்றது. மார்க் சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட் டச் செயலாளர் எஸ்.கந்தசாமி தலைமை வகித்தார். இக்கூட்டத்தில், 50 சதவிகித வரிவிதிப்பு மூலம் இந் தியா மீது அமெரிக்கா வர்த்தகப் போரைத் துவங்கியுள்ளது. இத னைக் கண்டித்தும், நாட்டின் சுயசார் புக் கொள்கை, ஏற்றுமதி தொழில்க ளைப் பாதுகாக்க வேண்டும் என வலியுறுத்தியும் செப்.5 ஆம் தேதி யன்று தமிழ்நாட்டின் தொழில் நக ரங்களில் ஆர்ப்பாட்டங்கள் நடை பெறுமென இடதுசாரி கட்சிகள் அறி வித்துள்ளன. அதன்படி, நாமக்கல் பூங்கா சாலையில் ஆர்ப்பாட்டம் நடத் துவது எனவும், இதில் பெருந்திர ளானோரை பங்கேற்க வைப்பது என வும் முடிவு செய்யப்பட்டது. முன்ன தாக, இக்கூட்டத்தில் சிபிஎம் மாவட்ட செயற்குழு உறுப்பினர் சு.சுரேஷ், நக ரச் செயலாளர் சீனிவாசன், சிபிஐ மாவட்டச் செயலாளர் கே.அன்பு மணி, மாவட்டக்குழு உறுப்பினர் கள் எஸ்.ஜெயராமன், செல்வராஜ், சிபிஐ (எம்-எல்) லிபரேசன் நிர்வாகி வெங்கடேசன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.