tamilnadu

img

வழக்கறிஞர் படுகொலையை கண்டித்து வழக்கறிஞர்கள் ஆர்ப்பாட்டம்

வழக்கறிஞர் படுகொலையை கண்டித்து வழக்கறிஞர்கள் ஆர்ப்பாட்டம்

கோவை, ஜூலை 30- தாராபுரம் வழக்கறிஞர் கொலையை கண்டித்து கோவை ஒருங்கிணைந்த நீதிமன்ற வளா கம் முன்பு வழக்கறிஞர்கள் ஆர்ப் பாட்டத்தில் ஈடுபட்டனர்.  திருப்பூர் மாவட்டம், தாராபு ரத்தில் தனியார் பள்ளி கட்டிட வழக்கு தொடர்பாக நீதிமன்ற ஊழி யர்களுடன் சென்ற சென்னை உயர்  நீதிமன்ற வழக்கறிஞர் முருகானந் தம் என்பவரை 5 பேர் கொண்ட  கூலிப்படையினர் வெட்டி கொலை  செய்தனர். இவ்வழக்கில் வழக்கறி ஞரின் உறவினர் தண்டபாணி உள்ளிட்ட 6 பேர் சரணடைந்தனர். இந்நிலையில் உயர் நீதிமன்ற வழக்கறிஞர் கொலையை கண்டித் தும், வழக்கறிஞர் பாதுகாப்பு சட் டத்தை இயற்றக் கோரியும் வழக்க றிஞர்கள் கூட்டு நடவடிக்கைக் குழு  மற்றும் கோவை மாவட்ட வழக்க றிஞர்கள் சங்கத்தினர் புதனன்று  ஒரு நாள் பணிகளை புறக்கணித்து,  நீதிமன்ற வளாக நுழைவு வாயில் முன்பு கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.  இது குறித்து பேசிய வழக்கறி ஞர்கள் கூட்டு நடவடிக்கைக் குழு தலைவர் நந்தகுமார். பொதுநல வழக்குகள் போடுவதால் வழக்கறி ஞர் மீது கூலிப் படை வைத்து தாக்கு தல் நடத்தப்பட்டது. வழக்கறிஞர் களுக்கு எந்தவித பாதுகாப்பும் இல்லை. வழக்கறிஞர்கள் பாது காப்பு சட்டத்தை தமிழ்நாடு அரசு  இயற்றிட வேண்டும் என கோரிக்கை வைத்து வருகிறோம். இதுவரை அச்சட்டம் இயற்றப்பட வில்லை. தாரபுரத்தில் நடைபெற்ற  வழக்கறிஞர் கொலையே கடை சியாக இருக்க வேண்டும். உடனடி யாக வழக்கறிஞர் பாதுகாப்பு சட் டத்தை இயற்ற வேண்டும் இல்லை யென்றால் மிகப் பெரிய போராட் டத்தை வழக்கறிஞர்கள் மேற் கொள்ளோம் என தெரிவித்தார்.