tamilnadu

img

கனிம வளக் கொள்ளை நடந்த நிலங்கள்: கருப்பு பட்டியலில் சேர்க்க நீதிபதிகளிடம் வலியுறுத்தல்

கனிம வளக் கொள்ளை நடந்த நிலங்கள்: கருப்பு பட்டியலில் சேர்க்க நீதிபதிகளிடம் வலியுறுத்தல்

கோவை, செப்.6- தடாகம் பள்ளத்தாக்கு பகுதியில் சட்டவிரோதமாகக் கனிமவளங்கள் கொள்ளையடிக்கப்பட்ட நிலங்களை வருவாய்த் துறையின் கறுப்புப் பட்டிய லில் சேர்க்க வேண்டும் என சென்னை உயர் நீதிமன்ற நீதிபதிகளிடம் தடாகம்  பள்ளத்தாக்கு பாதுகாப்பு குழுவினர் வலியுறுத்தினர். வன எல்லைகளை ஆய்வு செய்ய  வந்த நீதிபதிகள் சதீஷ்குமார், பரதட் சக்கரவர்த்தி ஆகியோரிடம் இவ் வமைப்பினர் அளித்த மனுவில், சட்ட விரோத செங்கல் சூளைகளால் ஏற்பட்ட  சுற்றுச்சூழல் பாதிப்புகளும், அதனால் யானைகளின் வலசைப் பாதைகள் கடுமையாக பாதிக்கப்பட்டு அவை  உயிரிழப்பது பற்றியும் குறிப்பிடப்பட்டி ருந்தது. சட்டவிரோத கனிமவளக் கொள்ளையால் 86 பெரிய பள்ளங்கள்  உருவாகியுள்ளன. இதனால் யானை கள் குழிகளில் விழுந்து உயிரிழக்கின் றன. மேலும், கடந்த காலத்தில் ஏற்பட்ட  மனித-யானை மோதல்களால் பலர் உயி ரிழந்த நிலையில், நீதிமன்றத்தின் தலை யீட்டிற்குப் பிறகு உயிரிழப்புகள் குறைந் துள்ளதாக பாதுகாப்பு குழுவினர் தெரி வித்தனர். சட்டவிரோதமாகக் கனிமவளம் கொள்ளையடிக்கப்பட்ட நிலங்களை விற்பனை செய்ய முடியாதபடி பத்திரப் பதிவு துறையில் முடக்க வேண்டும் என்றும், இந்தச் சட்டவிரோத செயல் களுக்கு உடந்தையாக இருந்த அரசு  அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க  வேண்டும் என்றும் மனுவில் கோரப்பட் டது. யானைகளின் வலசைப் பாதை யில் உள்ள டாஸ்மாக் கடையை அகற்ற வும் வலியுறுத்தப்பட்டது. இதேபோல், இருளர் சமூகத்தினர் அளித்த மனுவில், யானை வழித்தடங்க ளில் உள்ள ரிசார்டுகளை உடனடியாக  மூடி சீல் வைக்க வேண்டும் எனவும், அவற்றால் யானைகளின் அமைதியான வாழ்க்கை பாதிக்கப்படுவதாகவும் தெரிவிக்கப்பட்டது.