நில அளவை அலுவலர்கள் ஆர்ப்பாட்டம்
தருமபுரி, ஜூலை 7 – புல உதவியாளர்களை வெளி முகமை மூலம் பணியமர்த்தும் அரசாணையை ரத்து செய்ய வலியுறுத்தி, தமிழ்நாடு நில அளவை அலுவலர்கள் ஒன்றிப்பு சார்பில் தருமபுரி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு திங்க ளன்று கருப்புப் பட்டை அணிந்து ஆர்ப்பாட் டத்தில் ஈடுபட்டனர். வெளி முகமை மூலம் புல உதவியா ளர்களைப் பணியமர்த்தும் அரசாணை எண் 297-ஐ ரத்து செய்ய வேண்டும். 3 ஆண்டு களுக்கு நிர்வாக அனுமதி அளிக்கும் அர சாணை எண் 420-ஐ திரும்பப் பெற வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை முன்னிருத்தி நில அளவை அலுவலர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடு பட்டனர். ஆர்ப்பாட்டத்திற்கு சங்கத்தின் மாவட் டத் தலைவர் கி. வெங்கட்டேசன் தலைமை தாங்கினார். மாவட்டச் செயலாளர் சி. பிரபு, மாவட்டப் பொருளாளர் மா. முருகன், கோட் டத் தலைவர்கள் அரூர் ரா. சக்திவேல் மற் றும் தருமபுரி ரா. துரை ஆகியோர் கண்டன உரையாற்றினர். தமிழ்நாடு அரசு ஊழியர் சங்க மாவட் டத் தலைவர் எம். சுருளிநாதன், மாவட்டச் செயலாளர் ஏ. தெய்வானை, கிராம நிர்வாக அலுவலர் முன்னேற்ற சங்க மாவட்டத் தலை வர் அகிலன் அமிர்தராஜ், தமிழ்நாடு வருவாய் ஊழியர் சங்க மாவட்டச் செயலாளர் ரங்கன் மற்றும் தமிழ்நாடு நில அளவைப் பதிவேடு கள் துறை புல உதவியாளர் சங்க மாவட்டத் தலைவர் சுரேஷ் ஆகியோர் வாழ்த்திப் பேசி னர்.