கொடநாடு கொலை, கொள்ளை வழக்கு
உதகை, ஆக.26- கொடநாடு கொலை கொள்ளை சம்ப வம் நடைபெற்ற கொடநாடு பங்களாவை மாவட்ட அமர்வு நீதிபதி மற்றும் எதிர் தரப்பு வழக்கறிஞர்கள் நேரில் ஆய்வு செய்ய வேண்டும் என ஜித்தின் ஜாய் தாக்கல் செய்த மனுவை மாவட்ட நீதிபதி முரளிதரன் தள்ளு படி செய்து உத்தரவிட்டார். நீலகிரி மாவட்டம், கோத்தகிரி அருகே உள்ள கொடநாடு பங்களாவில் கடந்த 2017 ஆம் ஆண்டு கொலை, கொள்ளை சம்பவம் நடைபெற்றது. இந்த வழக்கில் தற்போது சயான் ஜித்தின் ஜாய் உள்ளிட்ட 10 பேரும் சாலை விபத்தில் உயிரிழந்த கனகராஜின் சகோதரர் மற்றும் உறவினர் என மொத்தம் 12 பேர் குற்றவாளிகளாக சேர்க்கப்பட்டுள்ள னர். தற்போது இந்த வழக்கை சிபிசிஐடி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்நிலையில், பத்தாவது குற்றவாளியாக சேர்க்கப்பட்டுள்ள ஜித்தின் ஜாய் சம்பவம் நடைபெற்ற கொடநாடு பங்களவில் தடயங் கள் அழிக்கபட்டு உள்ளதால் வழக்கை விசா ரித்து வரும் மாவட்ட நீதிபதி மற்றும் எதிர் தரப்பு வழக்கறிஞர்கள் கொடநாடு பங்க ளாவை ஆய்வு செய்ய வேண்டும் என்று கூறி கடந்த ஏப்ரல் மாதம் மனு ஒன்றை மாவட்ட நீதிமன்றத்தில் தாக்கல் செய்து இருந்தார். அந்த மனு மீது இருதரப்பு வாதங்கள் முடிந்த நிலையில், சிபிசிஐடி போலீசார் அந்த வழக்கில் தற்போது புலன் விசாரணை நடை பெற்று வருவதாலும் ஏற்கனவே நிபுணர் குழு அமைத்து அந்தக் குழு நேரில் ஆய்வு செய்து அதன் அறிக்கை நீதிமன்றத்தில் தாக்கல் செய் யபட்டு உள்ளதால் எதிர் தரப்பு வழக்கறிஞர் கள் கொடநாடு பங்களாவை ஆய்வு செய்ய அனுமதிக்க முடியாது என்று ஆட்சேபனை தெரிவித்தனர். இந்நிலையில் கொடநாடு கொலை, கொள்ளை வழக்கு செவ்வாயன்று உதகை யில் உள்ள மாவட்ட அமர்வு நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. அப்போது மாவட்ட நீதிபதி முரளிதரன் கொடநாடு பங்களாவை ஆய்வு செய்ய வேண்டும் என ஜித்தின் ஜாய் தாக்கல் செய்த மனு மீதான வழக்கை தள்ளு படி செய்ததுடன் வழக்கு விசாரணையை செப்.19 ஆம் தேதிக்கு ஒத்தி வைத்தார்.