tamilnadu

img

திறக்கப்பட்ட ஒருங்கிணைந்த தொழிலாளர் துறை அலுவலகம் பயன்பாட்டுக்கு வருவதை உறுதி செய்ய வேண்டும்

திறக்கப்பட்ட ஒருங்கிணைந்த தொழிலாளர் துறை அலுவலகம் பயன்பாட்டுக்கு வருவதை உறுதி செய்ய வேண்டும்

திருப்பூர், ஆக. 27 – திருப்பூரில் முதல்வர் மு.க.ஸ்டா லின் கடந்த திங்களன்று காணொலி காட்சி மூலம் திறந்து வைத்த ஒருங் கிணைந்த தொழிலாளர் துறை அலு வலகம் முழுமையாக தொழிலாளர் பயன்பாட்டுக்கு வருவதை மாவட்ட  நிர்வாகம் உறுதிப்படுத்த வேண்டும்  என தொழிற்சங்கத்தினர் வலியுறுத்தி னர். திருப்பூர் அவிநாசி சாலை குமார்  நகர் பகுதியில் மாநகரக் காவல் ஆணையர் அலுவலகம் அருகில் ஒருங்கிணைந்த தொழிலாளர் துறை  அலுவலகக் கட்டிடம் ரூ.42 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ளது. இரு  அரசு கட்டிடங்களிலும் ஒரே சமயத் தில் அடிக்கல் நாட்டப்பட்டாலும், மாந கரக் காவல் அலுவலகம் விரைந்து  பணிகள் முடிக்கப்பட்டு பயன்பாட் டுக்குக் கொண்டு வரப்பட்டது. அதே  சமயம் தொழிலாளர் துறை அலுவல கம் கட்டி முடிக்க தாமதமானது டன், அதன் பிறகும் இந்த கட்டிடம் திறக்கப்படாமல் காலதாமதம் செய் யப்பட்டு வந்தது. ஒரு வழியாக கடந்த ஆக.25 அன்று சென்னை தலைமைச் செயல கத்தில் இருந்து முதல்வர் இந்த கட்டி டத்தை காணொலி மூலம் திறந்து  வைத்தார். தொழிலாளர் மற்றும்  வேலை வாய்ப்புத் துறையின் இந்த  ஒருங்கிணைந்த தொழிலாளர்துறை அலுவலகக் கட்டடம் இரண்டு தளங்க ளுடன் 13 ஆயிரத்து 584 சதுரஅடி பரப் பளவில் அமைந்துள்ளது. தரைதளம்  4370 சதுரஅடியில் பொதுமக்கள் காத்திருப்பு அறை, முத்திரை ஆய் வாளர் அறை (வட்டம் 1, வட்டம் 2),  ஆய்வகம், முத்திரையிடும் அறை  மற்றும் பதிவறை (வட்டம் 1, வட்டம்  2), பொதுமக்கள் கழிப்பறையுடனும் உள்ளன. முதல் தளம் 4 ஆயிரத்து 607 சதுர  அடியில் தொழிலாளர் உதவி ஆணை யர் அறை (அமலாக்கம்), அலுவலக  அறை (அமலாக்கம்), பதிவறை (அம லாக்கம்), தொழிலாளர் உதவி ஆணையர் அறை (சமரசம்), அலுவ லக அறை (சமரசம்), பதிவறை (சமர சம்), பணியாளர் கழிப்பறையுடனும், இரண்டாம் தளம் 4 ஆயிரத்து 607 சதுர அடியில் தொழிலாளர் உதவி ஆணையர் அறை (எஸ்.எஸ்.எஸ்),  அலுவலக அறை (எஸ்.எஸ்.எஸ்),  பதிவறை (எஸ்.எஸ்.எஸ்), கருத்த ரங்கு அறை, நீதிமன்ற அறை, பணி யாளர் கழிப்பறையுடன் அமைக்கப் பட்டுள்ளது. தொழிலாளர் துறையின் அம லாக்கம், சமரசம், சமூக நலத்திட்டம் ஆகிய பிரதான மூன்று பிரிவுகளும் ஒரே கட்டிடத்தில் இயங்கும் வாய்ப்பு ஏற்பட்டுள்ளது. எனினும் தற்போது இந்த அலுவலகங்கள் வெவ்வேறு பகுதிகளில் செயல் பட்டு வருகின்றன. முறைப்படி புதிய  ஒருங்கிணைந்த அலுவலகம் திறக் கப்பட்டுள்ளதால் தனித்தனியாக இயங்கும் அலுவலகங்களை இன் னும் காலதாமதம் செய்யாமல் உட னடியாக இங்கு மாற்ற வேண்டும் என்று தொழிற்சங்கத்தினர் தெரி வித்தனர். புதிய அலுவலகக் கட்டிடம் இருந்தாலும் கூட, ஏற்கெனவே இருக் கும் பழைய அலுவலகங்களில் செயல்படுவதையே சில அதிகாரி கள் விரும்புவதாகவும், எனவே  மாற்றாமல் அங்கேயே காலம் கடத் தக்கூடிய நிலை இருப்பதாகவும் கூறப் படுகிறது. தொழிலாளர் நகரமான திருப்பூரில் இந்த அலுவலகத்தை முழு பயன்பாட்டுக்கு கொண்டு வருவதை மாவட்ட நிர்வாகம் உறு திப்படுத்த வேண்டும் என்று தொழிற் சங்கத்தினர் கூறினர்.