அவசர ஊர்தி ஓட்டுநர், மருத்துவ உதவியாளருக்கான நேர்காணல்
திருப்பூர் , செப்.6- திருப்பூரில் 108 அவசர ஊர்தி ஓட்டுநர் மற்றும் மருத்துவ உதவியாளருக்கான நேர்காணல் சனியன்று நடைபெற்றது. இதில், 48 பேர் பங்கேற்றனர். திருப்பூர் மாவட்டத்தில் 108 அவசர ஊர்தி சேவை நிறுவனத்தில் ஓட்டுநர் மற்றும் அவசர கால மருத்துவ உதவி யாளர் பணியிடங்களுக்கான நேர்காணல் சனியன்று நடை பெற்றது. அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை வளாகத் தில் நடைபெற்ற நேர்காணலில் மருத்துவ உதவியாளர் பணியி டங்களுக்கு 23 பேர் கலந்து கொண்டிருந்தனர். இதில், 8 பேர் தகுதியின் அடிப்படையில் தேர்வு செய்யப்பட்டனர். அதேபோல் ஓட்டுநர் பணியிடங்களுக்கு 25 பேர் கலந்து கொண்ட நேர்முக தேர்வில் 7 பேர் தேர்வு செய்யப்பட்டுள் ளனர். நேர்காணலுக்கான அறிவிப்பு மற்றும் தகுதிகள் ஏற்க னவே வெளியிடப்பட்டிருந்தது. இந்நிலையில், சனியன்று நேர்காணலுக்கு மொத்தம் 48 பேர் கலந்து கொண்டிருந்த னர். இதில், 15 பேர் தேர்வு செய்யப்பட்டனர். மீதமுள்ள காலிப் பணியிடங்களுக்கான அடுத்த கட்ட நேர்காணல் குறித்து தலைமை அலுவலகத்தில் இருந்து அறிவிப்பு வெளியாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.