உடுமலை ரயில் நிலையத்தில் ஆய்வு
உடுமலை, அக்.5- உடுமலை ரயில் நிலையத்தில், மதுரை கோட்ட மேலா ளர் ஓம் பிரகாஷ் மீனா உள்ளிட்ட அதிகாரிகள் சனியன்று ஆய்வு செய்தனர். மதுரை ரயில்வே கோட்ட மேலாளர் ஓம் பிரகாஷ் மீனா, உடுமலை ரயில் நிலையத்தில் சனியன்று ஆய்வு செய்தார். அப்போது, சில மாதங்களுக்கு முன் பொள்ளாச்சி, உடுமலை, பழனி, திண்டுக்கல் வழியாக இயங்கிய கோவை - தாம்பரம், கோவை - திண்டுக்கல் ரயில்களை மீண்டும் இயக்கக்கோரி பொள்ளாச்சி பாராளுமன்ற உறுப்பினர் ஈஸ்வரசாமி, தென் னக ரயில்வே பொது மேலாளருக்கு அனுப்பிய மனுவின் நகல் கோட்ட மேலாளரிடம் வழங்கப்பட்டது. மேலும், உடுமலை ரயில் நிலையத்தில் மரங்கள் நடுவதற்கும், அதை பரா மரிப்பதற்கும் அனுமதி வழங்கக்கோரி வனத்துக்குள் திருப் பூர் அமைப்பின் சார்பில் மனு அளிக்கப்பட்டது.
