சாலையை சீரமைக்க வலியுறுத்தல்
தருமபுரி, செப்.1- குண்டும், குழியுமாக உள்ள சாலையை விரைந்து சீரமைக்க வேண்டும் என பொது மக்கள் வலியுறுத்தியுள்ளனர். தருமபுரி மாவட்டம், பாப்பிரெட்டிப்பட்டி அருகே உள்ள மெணசியிலிருந்து தோழனூர் வழியாக கவுண்டம்பட்டி மற்றும் பள்ளிப் பட்டி பிரிவுக்கு சாலை செல்கிறது. அப்பகுதி யைச் சேர்ந்த பொதுமக்கள் கடைகளுக்கு செல்வதற்கும், விவசாயிகள் விளைப் பொருட் கள் எடுத்து செல்வதற்கும் இச்சாலையைத் தான் பயன்படுத்தி வருகின்றனர். மேலும், காலை - மாலை நேரங்களில் பள்ளி மற்றும் கல்லூரி வாகனங்கள் சென்று வருகின்றன. சுமார் மூன்று கிலோ மீட்டர் தூரம் உள்ள இந்த தார்ச்சாலை மிகவும் பழுதடைந்து குண்டும், குழியுமாக காட்சியளிக்கிறது. இதனால் தார்ச்சாலையில் பெயர்ந்த ஜல்லி கற்கள் அருகில் நின்றிருப்பவர்கள் மேல் பட்டு விபத்து ஏற்பட்டு வருகிறது. இதுகுறித்து சம் பந்தப்பட்ட துறை அதிகாரிகளுக்கு பலமுறை தகவல் கொடுத்தும், இதுவரை எந்தவித நடவ டிக்கையும் எடுக்கப்படவில்லை. எனவே, சாலையை சீரமைக்க நடவடிக்கை மாவட்ட நிர்வாகம் எடுக்க வேண்டும் என அப்பகுதி விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் வலியு றுத்தியுள்ளனர்.
