சாலைகளை செப்பனிட வலியுறுத்தல்
உதகை, செப்.26- குண்டும், குழியுமாக காணப்படும் சாலைகளை செப்ப னிட வலியுறுத்தி வாலிபர் சங்கத்தினர் நெடுஞ்சாலைத் துறையினரிடம் மனு அளித்தனர். நீலகிரி மவட்டம், கூடலூர், பந்தலூர் தாலுகாவில் குண் டும், குழியுமாக காணப்படும் சாலைகளை உடனடியாக சரி செய்ய வேண்டும். பந்தலூர் முதல் தேவாலா செல்லக் கூடிய சாலையில் மண்ணரிப்பு ஏற்பட்டுள்ளது. அதனை மண் மூட்டைகளை கொண்டு அடுக்கிய செயல் என்பது மேலும் ஆபத்தை விளைவிக்கக் கூடியதாக இருக்கிறது. அதனை உடனடியாக செப்பனிட வேண்டும் என வலியுறுத்தி இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தினர் வியாழனன்று நெடுஞ்சாலைத்துறை அதிகாரியிடம் மனு அளித்தனர். இந்நி கழ்வில், வாலிபர் சங்க மாவட்டச் செயலாளர் ராசி.ரவிக் குமார், ஏரியா செயலாளர் பெரியார் மணிகண்டன், தலைவர் செரிப், சிபிஎம் கிளைச் செயலாளர் சுபைர் உட்பட பலர் கலந்து கொண்டனர்.