பிஓஎஸ் இயந்திரங்களின் தொழில்நுட்பக் கோளாறை சரி செய்ய வலியுறுத்தல்
சேலம், ஆக.17- பிஓஎஸ் இயந்திரங்களின் தொழில்நுட்பக் கோளாறை சரி செய்ய வேண்டும் என கூட்டுறவு சங்கங்களின் பணியாளர்கள் சங் கம் வலியுறுத்தியுள்ளது. சேலம் மாவட்ட கூட்டுறவு சங்கங்களின் பணியாளர்கள் சங் கத்தின் 38 ஆவது ஆண்டு பேரவை, சேலம் வி.பி.சிந்தன் நினைவகத் தில் சனியன்று, சங்கத்தின் மாவட் டத் தலைவர் பி.பன்னீர்செல்வம் தலைமையில் நடைபெற்றது. கே. எஸ்.சந்தானம் வரவேற்றார். மாவட்ட பொதுச்செயலாளர் எல்.கே.மனோகரன், பொருளாளர் எஸ். கருனாகரன் ஆகியோர் அறிக்கை களை முன்வைத்தனர். சிஐடியு மாவட்டச் செயலாளர் எ.கோவிந் தன் மற்றும் நிர்வாகி எஸ்.கே.தியாக ராஜன் ஆகியோர் வாழ்த்திப் பேசி னர். இதில், கூட்டுறவுத் தேர்தலை உடனடியாக நடத்த வேண்டும். நியாய விலைக்கடைகளில் பிஓஎஸ் மெஷின்களின் ஏற்படும் தொழில்நுட்ப கோளாறுகளை உட னுக்குடன் சரிசெய்ய வேண்டும். கூட்டுறவுத் துறையில், பேராசிரியர் வைத்தியநாதன் குழு பரிந்துரை யின்படி ஏற்படுத்தப்பட்ட சட்டப் பிரிவு 136 டி-யை மீண்டும் அமல்ப டுத்த வேண்டும் உள்ளிட்ட தீர் மானங்கள் நிறைவேற்றப்பட்டன. இதைத்தொடர்ந்து, சங்கத்தின் செயல்தலைவராக பி.பன்னீர்செல் வம், மாவட்டத் தலைவராக எல்.கே. மனோகரன், பொதுச்செயலாள ராக பி.முத்துசாமி, பொருளாளராக எஸ்.கருனாகரன், தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்க பொறுப்பாளராக கே.எஸ்.சந்தா னம், பணியாளர் சங்க பொறுப்பாள ராக எஸ்.கலிபுல்லா, நியாய விலைக்கடை ஊழியர் பொறுப்பா ளராக வி.ரங்கசாமி, பால் கூட்டுறவு சங்க பொறுப்பாளராக டி.ஆனந் தன், சம்மேளன தொடர்பாளராக சி.கந்தசாமி மற்றும் துணைத்தலை வர்களாக 5 பேர், துணைச்செயலா ளர்களாக 5 பேர், நிர்வாகக்குழு உறுப்பினர்களாக 10 பேர் ஆகி யோர் தேர்வு செய்யப்பட்டனர். கூட்டுறவு ஊழியர் சம்மேளன பொதுச்செயலாளர் என்.ஆர்.ஆர். ஜீவானந்தம் நிறைவுரையாற்றி னார். நாமக்கல் இதேபோன்று, கூட்டுறவு ஊழி யர் சங்க நாமக்கல் மாவட்ட 13 ஆவது மாநாடு, சனியன்று நாம கிரிப்பேட்டையில் சங்கத்தின் மாவட்டத் தலைவர் எம்.ரங்கசாமி தலைமையில் நடைபெற்றது. கூட்டு றவு ஊழியர் சம்மேளன பொதுச் செலாளர் என்.ஆர்.ஆர்.ஜீவானந் தம் துவக்கவுரையாற்றினார். சிஐ டியு மாவட்ட உதவிச்செயலாளர் சு. சுரேஷ் சிறப்புரையாற்றினார். இம் மாநாட்டில், தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்க ஊழியர்களுக்கு உடனடியாக ஊதிய ஒப்பந்தம் போட வேண் டும். தாயுமானவர் திட்டத்தின் படி, வீடு தேடி ரேசன் பொருட்கள் வழங்கும் விற்பனையாளர்க ளுக்கு நாளொன்றுக்கு ஆயிரம் ரூபாய் வீதம் ஆபத்து படி (ரிஸ்க் அலவன்ஸ்) வழங்க வேண்டும். ரேசன் பொருட்களை பாக்கெட் முறையில் வழங்க வேண்டும். பணி செய்யும் இடத்தில் கழிப்பிடம் உள் ளிட்ட அடிப்படை வசதிகள் செய்து வர வேண்டும், உள்ளிட்ட தீர்மானங் கள் நிறைவேற்றப்பட்டன. இதைத் தொடர்ந்து, சங்கத்தின் நாமக்கல் மாவட்ட கௌரவத் தலைவராக எம்.ரங்கசாமி, தலைவராக ஜே. சிவக்குமார், பொதுச்செயலாள ராக ஏ.நாகராஜன், பொருளாளராக வி.கோபாலகிருஷ்ணன், துணைத் தலைவர்கள், துணைச்செயலா ளர்கள் மற்றும் நிர்வாகக்குழு உறுப்பினர்கள் தேர்வு செய்யப்பட் டனர். துணைச்செயலாளர் மூர்த்தி நன்றி கூறினார்.