இந்திய விடுதலை போராட்ட வீரரும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் கட்சியின் முன்னாள் அகில இந்திய பொதுச் செயலாளருமான தோழர் ஹர்கிஷன்சிங் சுர்ஜித் அவர்களின் நினைவு தினம், சிபிஎம் ஈரோடு மாவட்டக்குழு அலுவலகத்தில் வெள்ளியன்று அனுசரிக்கப்பட்டது. மாவட்ட செயற்குழு உறுப்பினர் பி.பி.பழனிசாமி தலைமையில் செயற்குழு உறுப்பினர்கள் ஜி.பழனிசாமி, கே.ஆர்.விஜயராகவன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். இதேபோன்று, சத்தியமங்கலத்தில் நடைபெற்ற நினைவு தின நிகழ்வில், கட்சியின் மூத்த தோழர் க.இரா.திருத்தணிகாசலம் உள்ளிட்ட திரளானோர் பங்கேற்றனர்.