tamilnadu

img

மருத்துவமனைகளில் உட்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்திடுக

   மருத்துவமனைகளில் உட்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்திடுக

தருமபுரி, ஆக.2- அரசு வட்ட தலைமை மருத்து வமனைகளின் உட்கட்டமைப்பு வச திகளை மேம்படுத்த வேண்டும் என  வலியுறுத்தி, வாலிபர் சங்க தரும புரி மாவட்ட மாநாட்டில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இந்திய ஜனநாயக வாலிபர் சங் கத்தின் தருமபுரி மாவட்ட 16 ஆவது மாநாடு ஆக.1,2 ஆகிய தேதிகளில் நடைபெற்றது. கடத்தூர் மீனாட்சி  மஹாலில் நடைபெற்ற பிரதிநிதி கள் மாநாட்டிற்கு, சங்கத்தின் மாவட்டத் தலைவர் ம.குறளரசன் தலைமை வகித்தார். மாவட்ட துணைத்தலைவர் செ.குப்பன் வெண்கொடியை ஏற்றி வைத்தார். வரவேற்புக்குழு தலைவர் கே. சக்திவேல் வரவேற்றார். மாவட்ட  துணைத்தலைவர் பே.கோவிந்த சாமி அஞ்சலி தீர்மானத்தை வாசித் தார். மாநில துணைத்தலைவர் டி. செல்வா மாநாட்டை துவக்கி வைத்து உரையாற்றினார். மாவட் டச் செயலாளர் எம்.அருள் குமார், பொருளாளர் மு.சிலம்பரசன் ஆகி யோர் அறிக்கைகளை முன்வைத்த னர். வாலிபர் சங்க மாநிலக்குழு உறுப்பினர் கே.இளவரசன், மாண வர் சங்க மாவட்டச் செயலாளர் ஸ்டாலின், மாதர் சங்க மாவட்டச் செயலாளர் ஆர்.மல்லிகா, மாண வர் சங்க முன்னாள் மாநில துணைத் தலைவர் தி.வ.தனுசன் ஆகியோர் வாழ்த்திப் பேசினர். இம்மாநாட்டில், பாப்பிரெட்டி பட்டி, மெணசி, வகுத்துப்பட்டி பகு திகளில் பட்டியலின மக்களுக்கு நடக்கும் தீண்டாமை கொடுமை களை தடுக்க வேண்டும். பாப்பி ரெட்டிப்பட்டியில் வேளாண்மை கல்லூரி, கூட்டுறவு மரவள்ளிக் கிழங்கு ஆலை துவக்க வேண்டும்.  தருமபுரி - பொம்மிடியை இணைக் கும் மிட்டா ரெட்டி அள்ளி - காளி கரம்பு மலைக்கிடையே சாலை  அமைக்க வேண்டும். காரிமங்க லம், நல்லம்பள்ளி வட்டங்களி லுள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலை யத்தை வட்ட தலைமை மருத்துவ மனையாக தரம் உயரத்த வேண் டும். மாவட்டத்திலுள்ள அரசு வட்ட தலைமை மருத்தவமனைகளில் தீவிர சிகிச்சை பிரிவு, சிடி, எம்ஆர்ஐ ஸ்கேன் வசதி உள்ளிட்ட உட்கட்டமைப்பு வசதிகளை மேம் படுத்த வேண்டும். பாலக்கோடு பகு தியில் தக்காளி, மா விளைச்சல் அதி கமாக இருப்பதால் மா, தக்காளி ஜூஸ் தொழிற்சாலை துவக்க வேண்டும். மாவட்டத்தில் வீடற்ற  ஏழை மக்களுக்கு இலவச வீட்டு மனை பட்டா, அரசு வீடு வழங்க  வேண்டும், உள்ளிட்ட தீர்மானங் கள் நிறைவேற்றப்பட்டன. இதைத்தொடர்ந்து, சங்கத்தின்  மாவட்டத் தலைவராக ம.குறளர சன், செயலாளராக பே.கோவிந்த சாமி, பொருளாளராக எம்.அருள் குமார், துணைத்தலைவர்களாக ராகப்பிரியா, பிரவீன், துணைச் செயலாளர்களாக சிலம்பரசன், ரவி  உட்பட 21 பேர் கொண்ட மாவட்டக் குழு தேர்வு செய்யப்பட்டது. மாநில துணைச்செயலாளர் கே.ஆர்.பாலாஜி நிறைவுரையாற்றினார்.