பாடத்திட்டத்தில் பிற்போக்கு கருத்துக்கள் திணிப்பு
தருமபுரி, செப்.3- பாடத்திட்டத்தில் பிற்போக்குத் தனமான கருத்துக்களை திணிப் பதை கைவிட வலியுறுத்தி, பல் கலைக்கழக மானியக்குழுவின் அறிக்கையின் நகலை எரித்து இந் திய மாணவர் போராட்டத்தில் ஈடு பட்டனர். பல்கலைக்கழக பாடத்திட்டத் தில் ஜாதகம் உள்ளிட்ட பிற்போக் கான கருத்துக்களை புகுத்தும் வகையில் ‘கற்றல் முடிவுகள் அடிப் படையிலான பாடத்திட்ட அமைப்பு (எல்ஓசிஎப்)’ என்ற வரைவு அறிக் கையை பல்கலைக்கழக மானியக் குழு (யுஜிசி) வெளியிட்டுள்ளது. இந்த அறிக்கையை திரும்பப்பெற வேண்டும் என வலியுறுத்தி, அதன் நகலை எரித்து இந்திய மாணவர் சங்கத்தினர் புதனன்று போராட்டத் தில் ஈடுபட்டனர். தருமபுரி அரசு கலைக்கல்லூரி முன்பு நடைபெற்ற போராட்டத்திற்கு, மாணவர் சங்க மாவட்டத் தலைவர் அஜித்குமார் தலைமை வகித்தார். இதில், சங் கத்தின் மாவட்டச் செயலாளர் ஸ்டா லின், மாவட்ட நிர்வாகிகள் மகேஸ் பாலா, நிவேதன், வேதப்பிரியன், தனுஷ் உட்பட பலர் கலந்து கொண் டனர். சேலம் சேலம் பெரியார் பல்கலைக்கழ கம் முன்பு நடைபெற்ற போராட்டத் திற்கு, மாணவர் சங்க மாவட்டத் தலைவர் டார்வின் தலைமை வகித் தார். மாவட்டச் செயலாளர் பவித் ரன் கண்டனவுரையாற்றினார். மாநிலக்குழு உறுப்பினர் காவியா, மாவட்ட இணைச்செயலாளர் கோகுல், மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் கீர்த்தனா, ரிஷி, மாவட்டக்குழு உறுப்பினர்கள் ரேணுகா, அகிலாண்டேஸ்வரி, செல்வம் உட்பட பலர் கலந்து கொண்டனர். கோவை கோவை பாரதியார் பல்கலைக் கழகம் முன்பு யுஜிசி நகல் போராட் டம் நடைபெற்றது. இதற்கு இந்திய மாணவர் சங்க மாவட்டத் தலைவர் பாவேல் தலைமை வகித்தார். மாவட்டச் செயலாளர் அகமது ஜூல்ஃபிகர் கண்டனவுரையாற்றி னார். இதில், மாவட்டக் குழு உறுப் பினர் பிரசாந்த் உள்ளிட்ட ஏராள மான மாணவர்கள் கலந்து கொண் டனர்.