tamilnadu

img

சட்டவிரோத மாறுதல்: ஆரம்பப்பள்ளி ஆசிரியர்கள் ஆர்ப்பாட்டம்

சட்டவிரோத மாறுதல்: ஆரம்பப்பள்ளி ஆசிரியர்கள் ஆர்ப்பாட்டம்

கோவை, ஜூலை 3- தலைமையாசிரியர், பட்டதாரி  ஆசிரியர் பதவி உயர்வு கலந் தாய்வுவை உடனடியாக நடத்தக்  கோரி தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி  ஆசிரியர் கூட்டணி சார்பில் வியாழ னன்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட னர். மாநிலம் முழுவதும் நிர்வாக மாறு தல் என்ற பெயரில் விதிகளுக்குப் புறம்பாக, சட்டவிரோதமாக மாறுதல் ஆணைகளை வழங்குவதை கண் டித்து தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசி ரியர் கூட்டணி சார்பில் மாநிலம் முழு வதும் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதன்ஒருபகுதியாக, கோவை ஆட் சியர் அலுவலகம் முன்பு நடை பெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு, மாவட் டத் தலைவர் ப.ரங்கநாத மூர்த்தி தலைமை வகித்தார். இதில், மாநில துணைத் தலைவர்கள் அ.தங்கபாசு, த.அருளானந்தம், மாவட்டச் செயலா ளர் ப.வீராச்சமி, துணைச் செயலா ளர் எம்.பாபு, பொருளாளர் எம். ராசாத்தி உள்ளிட்டோர் உரையாற்றி னர். ஈரோடு ஈரோடு முதன்மை கல்வி அலுவ லகம் முன்பு நடைபெற்ற ஆர்ப்பாட் டத்திற்கு, மாவட்டத் தலைவர் இ.விக் டர் செல்வக்குமார் தலைமை வகிக் தார். செயலாளர் யு.கே.சண்முகம் உள்ளிட்ட பலர் கலந்து கொண்ட னர். சேலம் சேலம் கோட்டை மைதானத்தில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு, சங் கத்தின் மாவட்டத் தலைவர் நா.ரவிச் சந்திரன் தலைமை வகித்தார். மாவட் டத் தலைவர் ராமகிருஷ்ணன் விளக்க வுரையாற்றினார். மாவட்டச் செயலா ளர் நா.பெரியசாமி சிறப்புரையாற்றி னார். இதில் அரசு ஊழியர் சங்க  நிர்வாகி முருகப்பெருமாள், ஓய்வு பெற்ற பள்ளி கல்லூரி ஆசிரியர் நல சங்க மாவட்ட இணைச்செயலாளர் சே.கணேசன் உட்பட திரளான ஆசி ரியர்கள் கலந்து கொண்டனர்.