சிங்கப்பூரிலிருந்து கோவை வந்த விமானத்தில் ரூ.7 கோடி மதிப்புள்ள உயர்தர கஞ்சா கடத்தி வந்த 2 பேர் சுங்கத்துறை அதிகாரிகளால் கைது செய்யப்பட்டனர்.
சுங்கத்துறைக்கு கிடைத்த ரகசிய தகவலின் பேரில், சிங்கப்பூர்–கோவை விமானத்தில் வந்த பயணிகள் மீது சோதனை நடத்தப்பட்டது. இதில், 6.7 கிலோ எடையுடைய ஹைட்ரோபோனிக்ஸ் என்ற உயர்தர கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது.
இவ்விபரத்தில், கேரளாவை சேர்ந்த ஹத் மோன் முஜீப் மற்றும் சுஹைல் வாழமத் உபைதுல்லா ஆகியோர் கைது செய்யப்பட்டனர்.
இவர்களுக்கு எதிராக சுங்கச் சட்டம் மற்றும் போதைப்பொருள் தடுப்பு சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டு, மேலதிக விசாரணை நடைபெற்று வருகிறது.