tamilnadu

வடமாநிலங்களில் கடும் மழையால் உள்நாட்டு ஆடைகளுக்கு பாதிப்பு

வடமாநிலங்களில் கடும் மழையால் உள்நாட்டு ஆடைகளுக்கு பாதிப்பு

திருப்பூர், அக்.3– வட மாநிலங்களில் தென் மேற்குப் பருவமழை மிகக்கடுமையான பாதிப்பை ஏற்படுத்திய நிலையில், திருப்பூரில் இருந்து பண்டிகைக் கால உள்நாட்டு ஆடை கள் விற்பனைக்கு செல்வது பாதிக்கப்பட்டிருப்பதாக உற்பத்தியாளர்கள் தெரிவித்தனர். திருப்பூரில் இருந்து பின்னலாடைகள் வெளிநாடுக ளுக்கு ஏற்றுமதியாவது தவிர, உள்நாட்டுச் சந்தைக் கும் கணிசமான ஆடைகள் தயாரிக்கப்பட்டு விற்பனைக்கு செல்கிறது. குறிப்பாக இங்கிருந்து கேரளம், கர்நா டகம், ஆந்திரம் உள்ளிட்ட தென் மாநிலங்களுக்கு மட்டு மின்றி தில்லி, மும்பை, கல்கத்தா உள்ளிட்ட பெரு நக ரங்களை மையப்படுத்திய சந்தைகளுக்கும் ஆடை கள் அனுப்பப்படுகின்றன. வழக்கமாக தீபாவளி பண்டி கைக்கு என்று உள்நாட்டு ஆடைகள் உற்பத்தி செய்யப் பட்டு ஓரிரு மாதங்களுக்கு முன்பாக அங்குள்ள சந்தை களுக்கு அனுப்பி வைக்கப்படும். ஆனால் செப்டம்பர் மாத தொடக்கத்தில் தென்மேற்கு பருவமழை வட மாநி லங்களில் மிகக் கடுமையாக பெய்தது. பல ஆறுகளில் வரலாறு காணாத அளவுக்கு அபாயக்கட்டத்தை தாண்டி  வெள்ளப் பெருக்கு ஏற்பட்டது. டில்லி, மும்பை உள்ளிட்ட நகரங்களும் மழையால் கடுமையாக பாதிக்கப்பட்டன. எனவே வழக்கமான காலத்தில் இங்கிருந்து செல்லக்கூடிய ஆடைகளை டில்லி, மும்பை வியாபாரி கள் கொள்முதல் செய்வது தாமதம் ஆனது. ஏற்கெனவே உற்பத்தி செய்யப்பட்ட ஆடைகள் தற்போது தாமதமாக அனுப்பி வைக்கப்படுகின்றன என்று திருப்பூர் உற்பத்தி யாளர்கள் கூறினர். குழந்தைகளுக்கான ஆடைகள் உற்பத்தி செய்யும் குணசேகரன் என்பவர் கூறுகையில்,  ஏற்கெனவே சில வாரங்களுக்கு முன்பே அனுப்பி  வைக்க வேண்டிய சரக்குகள் இன்னும் தேங்கியிருக்கின் றன. தற்போதுதான் எங்களது வாடிக்கையாளர்கள் ஒவ்வொருவராக, சரக்குகளை அனுப்பி வைக்கும்படி கேட்கின்றனர், என்றார். இது போல் பெண்கள், இளைஞர்களுக்கான டி சர்ட், சார்ட்ஸ் மற்றும் உள்ளாடைகள் ரகங்களும் வட மாநி லங்களுக்குச் செல்வது சற்று குறைந்திருப்பதாகத் தெரிவித்தனர்.