தற்காலிக பேருந்து நிலையத்தில் சுகாதார சீர்கேடு
ஈரோடு, அக்.17- அந்தியூர் தற்காலிக பேருந்து நிறுத்தத் தில் சுகாதாரம் காக்கப்படுமா? என்ற கேள்வி எழுந்துள்ளது. ஈரோடு மாவட்டம், அந்தியூரில் பேருந்து நிலைய பராமரிப்பு பணிகள் நடைபெற்று வரு கிறது. இதனால் அப்பகுதியிலுள்ள சந்தை யின் ஒரு பகுதியில் தற்காலிக பேருந்து நிலை யம் செயல்படுகிறது. மலைசார்ந்த நகரிலி ருந்து சென்னை, கம்பம் போன்ற பல பகுதி களுக்குச் செல்லும் புறநகர் பேருந்துகளும், நகரப் பேருந்துகளும் நாள்தோறும் வந்து செல்கின்றன. மழையின் காரணமாக தற்கா லிக பேருந்து நிலையத்தின் தரை சேறும், சகதி யுமாக மாறி வருகிறது. தாய்மார்கள் பாலூட் டும் அறை கழிப்பறைகளின் அருகே வைக்கப் பட்டுள்ளது. அதனால் அது பயன்பாடின்றி பூட்டியே வைக்கப்பட்டுள்ளது. இதனால் மக ளிர் உள்ளிட்ட பயணிகளின் சுகாதாரம் கேள் விக்குறியாகியுள்ளது. கழிவறைகளுக்கு போதுமான தண்ணீர் வசதியில்லாமல் உரிய பராமரிப்பின்றி உள்ளது. இதுகுறித்து பேரூ ராட்சி நிர்வாகம் கூடுதல் கவனம் செலுத்த வேண்டுமென சமூக ஆர்வலர்கள் வலியு றுத்தியுள்ளனர்.
