tamilnadu

லஞ்சம் வாங்கியபோது கையும் களவுமாக பிடிபட்டார்!

லஞ்சம் வாங்கியபோது கையும் களவுமாக பிடிபட்டார்! 

இந்து சமய அறநிலையத்துறை உதவி ஆணையர் கைது

கோவை, ஜூலை 18-  கோவையில் தனியார் கோவிலை இந்து சமய அறநிலையத்துறை நிர் வாகத்தின் கீழ் கொண்டு வருவ தற்கு, லஞ்சம் வாங்கிய உதவி ஆணையர் இந்திரா லஞ்ச ஒழிப்புத் துறை போலீசாரால் வெள்ளியன்று கைது செய்யப்பட்டார். கோவை மாவட்டம், சூலூர்  அருகே பாப்பம்பட்டி கிராமத்தில் தனியார் பராமரித்து வரும் கோவில் உள்ளது. இக்கோவிலின் ஆண்டு  வருமானம் 40 லட்ச ரூபாயாக இருந்து வருகிறது. இந்த கோவி லில் நிதி மேலாண்மை முறை யாக இல்லை என்று, இந்து சமய அறநிலையத்துறையின் கீழ் கொண்டு வர வேண்டும் என, இதன் நிர்வாகிகளில் ஒருவரான  சுரேஷ் குமார் என்பவர் இந்து சமய அற நிலையத்துறையில் மனு அளித்தி ருந்தார். உயர்நீதிமன்றமும் இது தொடர்பாக 12 வாரங்களில் நடவ டிக்கை எடுக்க இந்து சமய அற நிலையதுறைக்கு உத்தரவிட் டிருந்தது. இந்நிலையில், சுரேஷ் குமார் மனு மீது நடவடிக்கை எடுத்து, கோவிலை இந்து சமய அற நிலையத்துறையின் கீழ் கொண்டு வருவதற்கு மூன்று லட்ச ரூபாய் லஞ்சம் வழங்க வேண்டும் என உதவி ஆணையர் இந்திரா கேட் டுள்ளார். ஆனால் அவ்வளவு தொகை கொடுக்க முடியாது என  தெரிவித்த நிலையில், கடைசியாக 1.5 லட்ச ரூபாய் பணத்தை கொடுக்க வேண்டும் என இந்திரா தெரிவித் துள்ளார். இதனையடுத்து வியாழனன்று  இரவு இந்து சமய அறநிலையத் துறை அலுவலகம் அருகில் உள்ள  பாரதியார் சாலையில், ஒன்றரை லட்ச ரூபாய் பணத்தை சுரேஷ் குமாரிடம் இருந்து உதவி ஆணை யர் இந்திரா வாங்கினார். அப்பொ ழுது மறைந்திருந்த லஞ்ச ஒழிப்புத் துறை போலீசார் அவரை கைது செய்தனர். உதவி ஆணையர் இந் திரா லஞ்சம் வாங்கும் காட்சிகள்  அங்கிருந்த சிசிடிவி-யில் பதி வாகி இருந்தது. இந்நிலையில் கையும் களவுமாக உதவி ஆணை யர் இந்திராவை கைது செய்த லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் அவரை லஞ்ச ஒழிப்பு துறை அலுவலகத் தில் வைத்து விசாரித்து வருகின்ற னர். சிபிஎம் போராட்டம் கிணத்துக்கடவு, குருநெல்லி பாளையம் கிராமத்தில் இந்து சமய அறநிலைத்துறைக்கு சொந்தமான விநாயகர், மாரியம்மன், சுப்பி ரமணி திருக்கோயில்கள் அமைந் துள்ளன. இக்கோயில்களில் வைர வன் பண்டார குடும்பத்தார் பல ஆண்டுகளாக கோவிலில் சுமார் 25 ஏக்கரில் வரும் விளைச்சலைக் கொண்டு பூஜை செய்து வந்தனர். இந்நிலையில், உள்ளூர் ஆதிக்க சமூகத்தினரின் துணையோடு, அற நிலையத்துறையினர் பூசாரியிடம் இருந்து சாவி வாங்கியதோடு, அவர் கள் விவசாயம் செய்து வந்த சுமார் 25 ஏக்கர் நிலத்தையும் ஏலம் விட்ட னர். பூசாரிகளை வெளியேற்ற கட்டப்பஞ்சாயத்து செய்த சம்ப வத்தில், கோவை மாவட்ட இந்து  சமய அறநிலையத்துறை உதவி ஆணையர் உடந்தை என குற் றம்சாட்டி, கடந்த மாதம் அடுத்த டுத்து மார்க்சிஸ்ட் கட்சி முற்றுகை,  ஆர்ப்பட்டம் என போராட்டங்க ளில் ஈடுபட்டது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில், இதில் தொடர்பு டைய, இந்து சமய அறநிலையத் துறையின் உயரதிகாரி நேரடியாக லஞ்சம் வாங்கும் பொழுது கைது செய்யப்பட்டுள்ள சம்பவம் பரப ரப்பை ஏற்படுத்தியுள்ளது. மேலும், மார்க்சிஸ்ட் கட்சி முன்வைத்த குற்றச்சாட்டு உண்மை என்பது, தற் போது வெளிச்சத்திற்கு வந்துள் ளது.